தீராத பிரச்சனைகள் தீர செய்யவேண்டிய ஒரே விஷயம்
மனிதன் அவன் பிறப்பே அவனுடைய கர்ம வினைகள் கழிப்பதற்கே எடுத்தது.அப்படியாக அவனுக்கு நல்லதும்,கேட்டதும் எங்க இருந்து வருகின்றது என்று தெரியாது.ஆனால் சரியான நேரத்தில் அவனுக்கான நல்லதும்,கேட்டதும் நடந்து விடுகின்றது.இது தான் மாயை.
அப்படியாக சிலர் அவர்கள் செய்யாத தப்பிற்கு மாட்டிக்கொண்டு தவிப்பது உண்டு.உண்மையில் பிரச்சனைகள் ஏற்படுகின்றது என்றால் நாம் நல்லது என்று நினைத்து கொள்ள வேண்டும்.நமக்கு நடக்க இருக்கும் பெரிய தீய வினைகளில் இருந்து தப்பித்து கொள்ள அந்த பிரச்சனைகள் நேரம் கொடுத்திருக்கலாம்.
ஆக,மிகவும் மனம் வருந்தி துவண்டு போகாமல் இறைவனை நம்பி அந்த பிரச்சனையை போராடி கடக்க முயல வேண்டும். அப்படியாக,சிலருக்கு பிரச்சனைகள் அவர்களை இறுக்கி கொள்ளும் பொழுது அவர்களால் என்ன செய்வது என்று தெரியாது.
அந்த துன்ப பள்ளத்தில் இருந்து கொண்டு அவர்களால் கடவுளை வணங்குவதும் மிக பெரிய சவாலாக இருக்கும்.ஆனால்,நாம் அந்த நேரத்தில் துவண்டு போகாமல் வீடுகளில் இறைவனுடைய மந்திரங்கள் ஒலிக்க விட்டு அதை கேளுங்கள்.மந்திரங்களுக்கு இருக்கும் சக்தியை போல் எதற்கும் இல்லை.
ஒருவருடைய எப்பேர்ப்பட்ட மோசமான தோஷங்களையும் இந்த மந்திரங்கள் சொல்வதால் கழித்து விடமுடியும்.அதே போல் எவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் நாம் விடாது மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்தால் அந்த சூழ்நிலையால் உண்டாகும் கடுமை குறைந்து உங்களுக்கு சாதகமாக அமையும்.
ஆக வீட்டில் எப்பேர்ப்பட்ட பிரச்சனைகள் உண்டானாலும் அதிகாலையில் இறைவனுடைய மந்திரங்களை ஒலிக்க செய்யுங்கள்.அதை கேட்பதாலும் வீட்டில் அந்த மந்திரங்களின் ஒலியாலும் வீடுகளில் உள்ள தோஷம் விலகும்.
அதோடு குடும்பத்தில் நேர்மறை சிந்தனை மேலோங்கும்.அதிலும் குறிப்பாக ஆஞ்சிநேயர் ஸ்லோகம்,ஸ்ரீ ராமன் பாடல்கள் கேட்பதால் நமக்கு தைரியமும் வெற்றிகளும் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |