நாளுக்கு நாள் வளரும் சிவலிங்கம் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அதிசய சிவன் கோயில்
1.அருள்மிகு மல்லிகார்ஜுனேஸ்சுவரர் திருக்கோயில்,தகட்டூர்
தர்மபுரி மாவட்டத்தின் மிக முக்கிய சிவன் கோயிலாக இந்த அருள்மிகு மல்லிகார்ஜுனேஸ்சுவரர் திருக்கோயில் திகழ்கிறது.இக்கோயில் சுமார் 1000 ஆண்டுகள் மிகவும் பழமையான கோயிலாகும்.9 ம் நூற்றாண்டிலே திருப்பணிகள் செய்யப்பட்ட கோயில்.
ராமன் தவமிருந்த இடம் இத்திருத்தலம்.இங்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.மேலும் இக்கோயிலில் தாய்மையின் சிறப்பை உயர்த்திச் சொல்லும் வகையில் காமாட்சி அம்பாளின் சன்னதி சுவாமியின் சன்னதியை விட உயரமாக இருக்கிறது.இங்குள்ள அம்பாளான காமாட்சி சந்நிதியில் உள்ள 18 படிகளும் மிகவும் விசேஷமானவை.
இந்த 18 படிகளுக்கும் மலர்களால் அலங்காரம் செய்து 16 விதமான பொருட்களால் அபிஷேகம் செய்து 18 படிக்கும் மஞ்சள் குங்குமம் வைத்து, ஜவ்வாது சந்தனம் கலந்து பூசி, முக்கனிகள் படைத்து, புடவை சாத்தி வழிபடுகிறார்கள்.சுந்தரர், சம்பந்தர், அவ்வை, அரிசில் கிழார், பொன்முடியார், பரணர், கபிலர், நாகையார், அதியன், விண்ணத்தனார் முதலிய புலவர்களால் பாடல் பெற்ற திருத்தலம்.
மற்ற கோயில்களில் இல்லாத வகையில் அருள் தரும் சூலினி ராஜ துர்க்காம்பிகை சூலம், சங்கு ஏந்தி கொற்றவையாக மகிஷனை வதம் செய்யும் தோற்றத்தில் காட்சி தருகிறாள்.
இவள் எருமைத் தலையும் மனித உடலும் கொண்டு கத்தி, கேடயம் ஏந்தி, மகிஷன் கீழே வீழ்ந்துள்ள காட்சியும், அம்பிகை சூலினி இடது கரத்தால் மகிஷன் கொம்பை பற்றியும், இடது பாதத்தால் கழுத்தின் மீது மிதித்தும் சம்காரத்தில் அருள்புரியும் திருக்காட்சி மூலஸ்தான கருவறையில் கிழக்கு நோக்கி தமிழகத்தில் இத்தலத்தில் மட்டுமே காணமுடியும்.
மேலும் இங்கு பைரவர் யந்திர வடிவில் சூரிய சந்திரன் அக்னி ஜூவாலையுடன் அருள்பாலிக்கிறார்.
இடம்
அருள்மிகு மல்லிகார்ஜூனேசுவரர் திருக்கோயில், தகட்டூர் – 636 702, தர்மபுரி மாவட்டம்.
வழிபாட்டு நேரம்
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை
2.அருள்மிகு தீர்த்தகிரீசுவரர் திருக்கோயில்,தீர்த்தமலை
மலைகளில் 5 வகையான தீர்த்தங்கள் உள்ளத்தால் தீர்த்தமலை என பெயர் பெற்ற இடம். இத்தலத்தில் இறைவன் சுயம்புவாய் தீர்த்தகிரீஸ்வரர் என்ற திருநாமம் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.இராமபிரான் சிவபெருமானை இரண்டு இடங்களில் பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்துள்ளார்.
அதில் ஒன்று நாம் அனைவரும் அறிந்த உலக புகழ் பெற்ற ராமேசுவரம். மற்றொன்று தீர்த்தங்கள் நிறைந்த இந்த தீர்த்தமலையாகும்.ராவணனை சம்ஹாரம் செய்து விட்டு அயோத்தி நோக்கி செல்லும் போது ராமன் இங்கு சிவபூஜை செய்ய விரும்பினார். பூஜைக்கு காசியிலிருந்து தீர்த்தமும் பூவும் எடுத்து வர அனுமனை அனுப்பினார்.
ஆனால் அனுமன் வர தாமதம் ஆனதால் ராமர் தனது பாணத்தை எடுத்து மலையில் விட்டார். அவர் பாணம் விட்ட பாறையிலிருந்து தீர்த்தம் வந்தது.அதை வைத்து சிவபூஜை நடத்தினார். இதனால் இதற்கு ராமர் தீர்த்தம் என்று பெயர் வந்தது.மலைக்கு மேற்கே ராமன் தீர்த்தம் ,வாயு தீர்த்தம் ,வருண தீர்த்தம் உள்ளது.
கிழக்கே இந்திர தீர்த்தம் உள்ளது . வடக்கே அனுமந்த தீர்த்தம் உள்ளது . தெற்கே எம தீர்த்தம் உள்ளது ,இப்படியாக தீர்த்தங்களால் சூழப்பெற்ற அற்புத மலை தீர்த்தமலை என்பது குறிப்பிடக்கத்தக்கது.
இத்தனை சசிறப்பு வாய்ந்த தீர்த்தத்தில் நீராடினால் பாவங்கள் விலகி வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவோம் என்பது ஐதீகம்.மேலும் மலையில் மூலிகை நிறைந்து இருப்பதால் நாம் தீர்த்தத்தில் நீராடும் பொழுது நமக்கு ஏற்பட்ட அனைத்து விதமாக நோய்களும் விலகுகிறது.
இடம்
அருள்மிகு தீர்த்தகிரீசுவரர் திருக்கோயில், தீர்த்தமலை, தர்மபுரி மாவட்டம் – 636906
வழிபாட்டு நேரம்
காலை 6.00 மணி முதல் மதியம் 11.00 மணி வரை மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
3.அருள்மிகு சுயம்புலிங்கேஸ்வரர் திருக்கோயில்,அமானி மல்லாபுரம்
தர்மபுரியில் நாம் கட்டாயம் தரிசிக்க வேண்டிய சிவன் கோயில்களில் அருள்மிகு சுயம்புலிங்கேஸ்வரர் திருக்கோயில் முக்கியமான திருக்கோயில் ஆகும்.மேலும் இங்கு வீற்று இருக்கும் சிவலிங்கம் நாளுக்கு நாள் வளருவதாக அங்கு இருக்கும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
இங்குள்ள இறைவனிடம் மக்கள் நல்ல முறையில் பிராத்தனை செய்ய அதை கண்டிப்பாக இங்குள்ள ஈசன் நிறைவேற்றி வைப்பார் என்பது நம்பிக்கை.இக்கோயிலில் மாத சிவராத்திரி, மார்கழி திவாதிரை, மாதத்தில் இரண்டுநாள் பிரதோஷபூஜை என சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது.
குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க இங்குள்ள ஈசனை வழிபாடு செய்கின்றனர்.மேலும் திருமண தடை.ஜாதக தோஷம் இருபவர்களும் இங்கு வந்து ஈசனை வழிபட வாழ்க்கையில் நல்லதோர் மாற்றம் உருவாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இடம்
அருள்மிகு சுயம்புலிங்கேஸ்வரர் திருக்கோயில், அமானிமல்லாபுரம், தர்மபுரி மாவட்டம்.
வாழிபாட்டு நேரம்
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை
4.அருள்மிகு சென்னகேஸ்வர பெருமாள் திருக்கோயில்,கோவிலூர்
தர்மபுரி மாவட்டத்தில் அமையப்பெற்ற புகழ் வாய்ந்த பெருமாள் கோயில் இந்த அருள்மிகு சென்னகேஸ்வர பெருமாள் திருக்கோயில் ஆகும்.விஷ்ணு கோயில்களில் பொதுவாக பைரவர் காணப்படுவதில்லை. ஆனால் இந்த தலத்தில் மூலவரின் அருகிலேயே பைரவர் அருள்பாலிக்கிறார்.
மேலும் இந்த தலத்தில் சிவன் சன்னதியும் இருப்பது சிறப்பம்சம் ஆகும்.இங்குள்ள ஆஞ்சநேயர் கையில் வாளுடன் இருப்பதால் இவருக்கு வீர ஆஞ்சநேயர் எனப்படுகிறார். சென்னகேஸ்வர பெருமாளின் விக்ரகம் சில சமயங்களில் நரசிம்மரைப்போலவே காட்சி தருகிறது.
மேலும் ராமானுஜர், விஸ்வக்சேனர் ஆகியோரும் இங்கு அருள்பாலிக்கின்றனர்.இத்தல இறைவனை வழிபாடு செய்வதால் சகல நலன்களும் பெருகி வாழ்க்கை திருமுனையாக அமையும்.இந்த கோயில் அன்னை அமைந்த இடத்தை ருத்ரபூமி என தேவப்பிரசன்னத்தில் கூறியதால் சிவலிங்கப் பிரதிஷ்டையும் செய்யப்பட்டது.
உற்சவருடன் ஸ்ரீதேவி, பூதேவி அருள்பாலிக்கின்றனர்.மேலும் மைசூர் அரச குடும்பத்தினர் சென்னகேஸ்வர பெருமாளிடம் மிகவும் பக்தியுடன் இருந்ததாகவும் அதன் பலனாக ஆண் சந்ததிகளை பெற்றனர் எனவும் கூறுகின்றனர்.
சென்னகேஸ்வர பெருமாள் ஏழுமலையான் வெங்கடாசலபதியின் மூத்த சகோதரர் எனவும் இவர் பல நூற்றுக்கணக்கான குடும்பங்களின் குல தெய்வமாக இவர் விளங்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்னும் கூடுதல் விஷேசமாக இக்கோயிலின் பிரசாதத்தை சொல்லலாம்.அதாவது பெருமாள் கோயில்களில் நாம் நைவேத்தியங்களை பார்த்திருப்போம். ஆனால் பொரி கடலை மாவு நைவேத்தியம் செய்யப்படும் பெருமாள் கோயில் தர்மபுரி மாவட்டம் கோவிலூர் என்ற இடத்தில் மட்டும் தான் உள்ளது. இங்குள்ள சென்னகேஸ்வர பெருமாளுக்கு சர்க்கரை கலந்த பொரிகடலை மாவு நைவேத்தியம் செய்கிறார்கள்.
இடம்
அருள்மிகு சென்னகேஸ்வர பெருமாள் திருக்கோயில், கோவிலூர்- 635 205தர்மபுரி மாவட்டம்.
வழிபாட்டு நேரம்
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை
5.அருள்மிகு பேட்டைராய சுவாமி திருக்கோயில்,தேன்கனிக்கோட்டை
இக்கோயில் சுமார் 500 முதல் 1000 ஆண்டு பழமை வாய்ந்த பெருமாள் கோயிலாகும்.கோயில் அமைந்துள்ள இடத்திற்கு அந்த காலத்தில் அத்திரி வனம் என்று பெயர்.
அந்த காட்டில் கண்வர் என்றவர் தவம் செய்ய வந்தார். தவம் செய்து கொண்டிருக்கும் போது தேவகண்டகவன் என்ற யக்ஷன் சாபம் ஏற்பட்டு புலித் தலை,மனித உடம்போடு அலைந்த கொண்டிருந்ததால் கண்வர் ரிஷியின் தவத்திற்கு இடையூறு ஏற்பட்டது.
அதனால் துன்பம் ஏற்பட்ட கண்வ ரிஷி திருவேங்கட மலையானை நினைத்து வழிபட்டு தன்னை காக்க வேண்டுமென்று வேண்டிக்கொண்டான். திருவேங்கடமலையானும் இவன் புலித் தலையோடு இருந்ததால் வேட்டைக்கார ரூபத்தில் வந்து போரிட்டு அடித்து சம்காரம் செய்து முனிவரின் தவத்தை காப்பாற்றினார்.
முனிவரின் பிரார்த்தனையின் பேரில் பேட்டைராய சுவாமி என்ற பெயரில் பூதேவி ஸ்ரீ தேவியோடு இங்கு எழுந்தருளியதாக வரலாறு கூறுகிறது.மூலவரை வைகுண்ட ஏகாதசியன்று பரமபத நாதனைப்போல் உட்கார்ந்த திருக்கோலத்தில் அலங்கரித்து பூஜை செய்கிறார்கள்.
திருவரங்க பெருமாள் கோயிலில் நடக்கும் பூஜைகளைப் போலவே இங்கும் பூஜைகள் நடைபெறுகிறது.மேலும் புரட்டாசி சனிக்கிழமைகள் இத்தலத்தில் மிகவும் விசேஷமானவை.மேலும் இங்குள்ள தாயாரை 18 நாட்கள் பூஜித்து சுலோகம் சொன்னால் கல்யாண வரம் கை கூடப் பெறலாம்.
இடம்
அருள்மிகு பேட்டைராய சுவாமி திருக்கோயில், தேன்கனிக்கோட்டை, தர்மபுரி மாவட்டம்.
வழிபாட்டு நேரம்
காலை6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |