வீட்டில் மறந்தும் மஹாலக்ஷ்மி படத்தை இந்த திசையில் வைக்காதீர்கள்
ஒரு மனிதனுக்கு செல்வம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். அந்த செல்வத்திற்கு அதிபதி மஹாலக்ஷ்மி தாயார் ஆவார்கள். அம்பாளை மனப்பூரவமாக வழிபாடு செய்து, பூஜை செய்து செய்து வர நம்முடைய வாழ்க்கையில் பண தட்டுப்பாடுகள் உண்டாகாமல் இருக்கும்.
அப்படியாக, மஹாலக்ஷ்மி தயார் படத்தை வீடுகளில் வைத்து வழிபாடு செய்வதுண்டு. அதன் அடிப்படையில், வாஸ்து ரீதியாக மஹாலக்ஷ்மி தாயாரின் படத்தை மறந்தும் சில திசைகளில் வைக்க கூடாது என்று சொல்லப்படுகிறது. அதை பற்றி பார்ப்போம்.
நம் வீடுகளில் மஹாலக்ஷ்மியின் பரிபூர்ண அருளை பெற வடக்கு அல்லது வடக்கிழக்கு திசையில் மஹாலக்ஷ்மி தாயாரின் படத்தை வைத்து வழிபாடு செய்வது சிறந்த பலன் கொடுக்கும்.
இந்த திசையில் மஹாலக்ஷ்மியின் தயார் படம் வைத்து வாழிபாடு செய்வது மங்களகரமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
முக்கியமாக, தாமரை மலரில் அமர்ந்து செல்வத்தை பொழியும் லட்சுமி தேவியின் படத்தை இந்த திசையில் வைத்தால் வீட்டில் பணத்திற்கு தட்டுப்பாடு வராது.
அதே போல் மறந்தும், மஹாலக்ஷ்மி தேவியின் படத்தை தவறுதலாக கூட தெற்கு அல்லது தென்மேற்கு திசையில் வைக்க வேண்டாம்.
இவ்வாறு வைப்பது வீட்டில் எதிர்மறை ஆற்றலை உருவாக்குவதோடு, வீடுகளில் நிதி நெருக்கடிகள் உருவாகும். மேலும், மஹாலக்ஷ்மியின் படத்தை வீடுகளில் வைக்கும் பொழுது, எப்பொழுதும் விநாயகர் படத்துடன் சேர்த்து வைப்பது கூடுதல் பலன் கொடுக்கும்.
மேலும், லட்சுமி தேவியின் படம் அல்லது சிலையை தவறுதலாக கூட நீங்கள் தூங்கும் அறை மற்றும் சமையல் அறைக்கு அருகில் ஒருபோதும் வைக்கவே கூடாது.
அதோடு, மறக்காமல் மஹாலக்ஷ்மி தாயாரின் படத்திற்கு தினமும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்திட வேண்டும். இவ்வாறு செய்து வர வீடுகளில் மகிழ்ச்சி பெருகி, நிதிநிலைமை மேம்படும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |