2026-ல் 12 ராசிகளும் எந்த விஷயங்களில் கவனத்தோடு இருக்க வேண்டும்?
ஜோதிடம் என்பது நமக்கு ஒரு அற்புதமான வழிகாட்டுதலாகும். காரணம் நம் எதிர்காலத்தில் நடக்க இருப்பதை கிரகங்கள் வழியாக தெரிந்து கொண்டு நாம் நம்மை அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
அதாவது வருவதை எதிர்கொள்வதற்கு நாம் நம்மை தயார் நிலையில் வைத்துக் கொள்ளலாம். அப்படியாக 2026 புதிய வருடம் பிறக்க இருக்க நேரத்தில் கிரகங்களின் அமைப்புகள் படி 12 ராசிகளும் எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்? எந்தெந்த விஷயங்களில் அவர்கள் புது வருடம் பிரச்சனையை சந்திக்க காத்திருக்கிறார்கள். என்பதை பற்றி பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசி எடுத்துக் கொண்டால் ஆடம்பர செலவுகள் உருவாகும். அதை தவிர்த்துக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் பிள்ளைகளுடைய விஷயங்களில் இவர்கள் மிக கவனமாக கையாள்வது அவசியம்.
ரிஷபம்:
ரிஷப ராசிகளுக்கு தாய் மற்றும் தொழில் ரீதியாக பிரச்சினை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆதலால் இவர்கள் இருவரிடத்திலும் பேசும் பொழுது மிகவும் கவனம் தேவை.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு ரத்த தொடர்பான உறவுகளிடம் இருந்தும் எதிர்பாராத விதமாகவும், நண்பர்களிடத்தில் இருந்தும் இன்னும் சிலருக்கு வேலை செய்யக்கூடிய அலுவலகத்திலே நிறைய எதிரிகள் உருவாக வாய்ப்புகள் இருக்கிறது. கவனம் தேவை.
கடகம்:
கடக ராசியினர் 2026 வருடம் முழுவதுமே தந்தை வழி உறவுகளிடம் நீங்கள் சற்று விலகியே இருந்துவிடலாம் . நீங்கள் உபயோகிக்க கூடிய வார்த்தை தான் உங்களுக்கு எதிரியை உருவாக்க கூடியவர்களாக இருப்பார்கள். அதோடு பணம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை.
சிம்மம்:
சிம்ம ராசியினர் அவர்களுடைய சொந்த வாழ்க்கையில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். துணையிடம்தேவை இல்லாமல் சண்டை போடாதீர்கள். மனக்குழப்பங்கள் மற்றும் உடல் ரீதியாக ஆரோக்கிய குறைபாடுகள் வரலாம்.
கன்னி:
கன்னி ராசியினர் அவர்களுடைய வேலையில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். தவறான நட்புகளை நீங்கள் துண்டித்து விடுவது அவசியம். உறவுகள் வழியாக அவமானங்களை சந்திக்க கூடும்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு இவர்களுடைய எதிரி மற்றும் கடன் பிரச்சனை அதிகமாகும். தொழில் ரீதியாக நீங்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். கடமையை செய்வதில் கவனமாக இருந்தாலே போதும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு அவர்களுடைய வண்டி வாகனத்தில் செல்லும் பொழுது நிச்சயம் கவனம் தேவை. தாய் உடல் நிலையில் அக்கறை வேண்டும். வேலை மற்றும் பயணங்களில் நிதானம் தேவை.
தனுசு:
தனுசு ராசியினருக்கு 2026 வருடம் முழுவதுமே அவர்களுடைய தாய் உடல் நிலையில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். நிலம் தொடர்பான விஷயங்களில் சண்டைகள் வரலாம்.
மகரம்:
மகர ராசியினருக்கு ரத்த தொடர்பால் நிறைய சங்கடங்கள் காத்திருக்கிறது. உறவினர்களிடம் நீங்கள் மிகுந்த கவனத்துடன் உங்களுடைய சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு தவறான நபர்களுடைய நட்பால் இவர்கள் இந்த காலகட்டங்களில் கெட்ட பெயரை வாங்க நேரலாம். முடிந்தவரை கவனமாக இருங்கள் அல்லது வருகின்ற பிரச்சனையை புத்திசாலித்தனமாக சமாளித்து வெளியேறுங்கள்.
மீனம்:
மீன ராசியினர் 2026 ஆம் வருடம் அவர்களுடைய உடல் நிலையிலும் மனதிலும் இவர்கள் கவனம் செலுத்த வேண்டும். அதாவது மன அழுத்தம் காரணமாக இவர்கள் உடல் உபாதைகள் சந்திக்க நேரலாம். கவனமாக இருக்க வேண்டும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |