வாஸ்து: வீடுகளில் குளவி தேனீ புறாக்கள் கூடு கட்டினால் ஆபத்து வருமா?

By Sakthi Raj Aug 30, 2026 07:47 AM GMT
Report

 பொதுவாக, இந்து மத இந்து மத சாஸ்திரப்படி நம் நிறைய விஷயங்களை பின்பற்றி வருகிறோம். அந்த வகையில், வீடுகளில் குளவி, தேனீ அணில் மற்றும் புறாக்கள் கூடு கட்டுவது குறித்து நம்முடைய பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஆன்மீக கருத்துக்கள் அதிகம் உள்ளது. அதைப் பற்றி பார்ப்போம்.

ஒருவருக்கு குழந்தை பாக்கியம் மற்றும் ஒரு வீட்டில் திருமணத்திற்காக ஆணோ பெண்ணோ இருக்கின்ற பொழுது குளவி கூடு கட்டினால் அது நல்ல அறிகுறியாகும். ஆறு மாதங்களுக்கு ஒரு நல்ல மாற்றம் நிகழும் என்று சொல்கிறார்கள்.

அதேபோல், தேனீகூடு கட்டுகின்ற பொழுது அதில் எந்த இடத்தில் கட்டி இருக்கிறது என்பதை பொறுத்து பலன்கள் மாறுகிறது. அதாவது, வடகிழக்கு போன்ற பகுதிகளில் தேன்கூடு கட்டினால் நேர்மறையான பலன் கிடைக்கும்.

ஆனால் வீட்டில் உள்ள ஆண் நபருடன் தொடர்புடைய தென்மேற்கு போன்று பகுதிகளில் தேன் கூடு கட்டினால் சில சவால்களை உண்டு செய்யலாம். அணில் வீட்டில் கூடு கட்டுவது ஒரு மங்களகரமான அறிகுறியாக கருதப்படுகிறது.

18 வருஷத்திற்கு பிறகு உருவாகும் மிகப்பெரிய அதிர்ஷ்டம்.. கேதுவால் பொற்காலம் யாருக்கு?

18 வருஷத்திற்கு பிறகு உருவாகும் மிகப்பெரிய அதிர்ஷ்டம்.. கேதுவால் பொற்காலம் யாருக்கு?

இதனால் வீட்டிற்கு ஒரு நல்ல பண வளம் மற்றும் செழிப்பை கொண்டு வந்து சேர்க்கும். அதை போல், புறாக்கள் தங்கக்கூடிய திசையையும் நாம் கவனிக்க வேண்டும். வீடுகளில் தெற்கு மேற்கு ஆகியவற்றில் புறாக்கள் கூடு கட்டினால் இனம் பெருக்கம் செய்வது மற்றும் குடும்பத்தில் சில பாதிப்புகளை உண்டு செய்யலாம்.

வீடுகளில் அணில் கூடு கட்டுவது மங்களகரமான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. இதனால் வீட்டிற்கு நல்ல பண வளமும் செல்வ செழிப்பும் உண்டாகும். மேலும், வீடுகளில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும் போது நிச்சயம் அதற்குரிய வாஸ்து நிபுணர்களை சந்தித்து முன்னதாகவே சரிபார்த்துக் கொள்வது அவசியம் என்று சொல்கிறார்கள்.

வீடுகளில் பொருளாதார சிக்கல்கள் அதிகம் ஏற்படுகின்ற பொழுது குளிக்கும் தண்ணீரில் கல் உப்பு சேர்த்து குளிப்பது நல்ல பலன்களை தரும். மேலும், வாஸ்து பற்றிய பல்வேறு விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் வாஸ்து நிபுணர் டாக்டர் சஷ்டி ஸ்ரீ சரவணா தேவி அவர்கள். அதைப் பற்றி இந்த காணொளியில் பார்ப்போம்.    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US