கெட்ட கனவுகள் காண்பதால் கெட்ட விஷயங்கள் நடக்குமா?
கனவு என்பதை யாரும் தடுக்க முடியாத ஒன்று.அப்படியாக,பலருக்கும் பல விதமான எதிர்பாராத கனவுகள் வரும்.மேலும் கனவு என்பது நேர்மறை கனவுகளாக மற்றும் இருக்க வேண்டும் என்று இல்லை.
எதிர்மறை கனவுகளாக கூட இருக்கலாம்.அப்படியாக.எதிர்மறை கனவுகள் கண்டால் வாழ்க்கையில் எதிர்மறை விஷயங்களை தான் சந்திப்போமா?அதற்கான பரிகாரங்கள் என்ன என்று பார்ப்போம். கனவுகளில் நம்முடைய நெருங்கிய சொந்தம் இறந்து போனால் கண்டிப்பாக அச்சம் தோன்றும்.
அவ்வாறு நெருங்கிய சொந்தங்கள் அல்லது நண்பர்கள் இறந்து போவதாக கனவு கண்டால் அவர்களின் ஆயுள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
அதே போல் சிலருக்கு அடிக்கடி உயரமான கட்டிடத்தில் இருந்து கீழே விழுவது போல் கனவுகள் வரும்.அவ்வாறு கனவுகள் வந்தால் அவர்களுக்கு பொருளாதாரத்தில் உயர்வு உண்டாகும் என்பது அர்த்தம்.
சிலருக்கு பாம்பு கொட்டுவது போல் கனவு வந்தால் அவர்களின் திறமை வெளிப்பட போகிறது என்று அர்த்தம்.அதே சமயம் கனவில்,நெருப்பை காணும் பொழுது உங்களை அதிர்ஷடம் தேடி வர போகிறது என்று அர்த்தம்.
ஆமை மீன் தவளை போன்ற நீர் வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் நீண்ட நாள் மனதை வருடிய கவலைகள் பறந்து போகும்.இறந்தவருடன் பேசுவது போல் கனவு கண்டால் நீங்கள் எதிர்பார்த்த விஷயம் தடை இன்றி நடக்கப்போகிறது என்று அர்த்தம்.
பரிகாரங்கள்:
பாம்பு மற்றும் விஷ ஜந்துக்கள் அடிக்கடி கனவில் வந்து தொந்தரவு செய்தால் கருடன் மீது இருக்கும் விஷ்ணுவின் படத்தை பூஜை செய்து வழிபட்டால் விஷ ஜந்துக்கள் கனவுகள் வராது.
உடல்நலன் குறைபாடு போன்ற விஷயங்களை கனவில் வரும் பொழுது தன்வந்திரி மந்திரம் கூறி தன்வந்திரியை வழிபட வேண்டும். ஆஞ்சநேயர் வழிபாடும் நல்லது.
பேய்,பிசாசு போன்ற மற்றும் சுபகாரியங்கள் நின்று போவது போல் கனவு கண்டால் விநாயகரை வாழிபாடு செய்யவேண்டும். மேலும்,கெட்ட கனவுகளில் இருந்து விலக பெருமாள் வழி பாடு சிறந்த பலன் அளிக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |