தாய் தந்தை செய்த பாவம் பிள்ளைகளை பாதிக்குமா?
நம்முடைய ஜோதிட சாஸ்திரத்தில் பாவ புண்ணிய கணக்குகள் என்பதை முழுமையாக நம்பப்படுகிறது. அதாவது, நாம் செய்யும் பாவமும் புண்ணியமும் சரியான நேரத்தில் நம்மை வந்து சேரும் என்று சொல்லப்படுகிறது.
அப்படியாக, பலருக்கும் தாங்கள் செய்யும் பாவ புண்ணியம் தங்கள் பிள்ளைங்களை பாதிக்குமா? என்ற சந்தேகம் இருக்கும். கட்டாயம் நாம் செய்யும் பாவமும் புண்ணியமும் நம்முடைய குழந்தைகளை பாதிக்கும். அதாவது, நாம் செய்த நன்மை தீமையை நாம் அனுபவிக்காமல் போனாலும் அந்த கணக்குகளை நம்முடைய வாரிசுகள் கட்டாயம் அனுபவித்தே தீருவார்கள்.
மேலும், மனிதர்கள் அவர்கள் வாழ்நாளில் தாங்கள் செய்த பாவங்களை கழிப்பதற்க்கு பல கோயில்களுக்கும் சென்று புனித தீர்த்தத்தில் நீராடுவது உண்டு. இன்னும் சிலர் அவர்களுடைய கர்ம வினைகள் தீர சித்தர்கள் வழிபாடு செய்வார்கள்.
அப்படியாக, உண்மையில் சித்தர்கள் வழிபாடு செய்வது நம்முடைய கர்ம வினைகளை தீர்க்குமா? சித்தர்கள் வழிபாடு செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? சித்தர்கள் நமக்கு எதன் அடிப்படையில் அருள் வழங்குகிறார் என்று பல்வேறு ஆன்மீக விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் சித்தர் தாசன் அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |