வீட்டு விலங்குகளுக்கும் numerology படி பெயர் வைக்கணுமா?
இந்த கேள்வியை முன்வைக்கும் பொழுது கொஞ்சம் ஆச்சர்யமாகதான் இருந்தது.இதுவெல்லாம் சாத்தியமா? என்ற கேள்விக்கு பிரபல பார்மெட் நியூமராலஜி நிபுணர் Dr. Mahha Dan Shekar Raajha அவர்கள் தெளிவாக பதில் சொல்லியிருக்கிறார்.
பொதுவாக பிறக்கும் குழந்தைக்கு அதிர்ஷ்டப் பெயர் அமைப்பதால் ஏற்படும் நற்பலன் போன்றே நாம் வீட்டில் வளர்க்கும், செல்ல பிராணிகளான நாய் மற்றும் பூனைகளுக்கு கூட நமக்கு ஒத்துவரும் நல்ல பெயரை சூட்டுவதாலும் அப்பெயரை அடிக்கடி உச்சரித்து அழைப்பதாலும் அந்த விலங்குகளின் மூர்க்கமான குணங்கள் மறைந்து சாதுவாக மாறிவிடுமாம்.
அதுமட்டுமில்லாமல் நம் குடும்பத்தோடு ஒத்திசைந்து அதிர்ஷ்ட்டத்தையும் வழங்குமாம் இதையெல்லாம் கவனிக்காமல் நம் இஸ்டத்திற்கு ஜிம்மி, டாமி என வாய்க்கு வந்த பெயரை வைப்பது வளர்ப்பவர்களுக்கு எதிர் விளைவுகளையும் தருமாம்.
மேலும் தகவல்களுக்கு இணைக்கப்பட்டுள்ள காணொளியை காணவும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |