தவறியும் இந்த 5 விஷயங்களை வீடுகளில் செய்யாதீர்கள்.. கடன் பிரச்சனை வருமாம்

By Sakthi Raj Feb 19, 2026 05:29 AM GMT
Report

மனிதர்களுடைய வாழ்க்கை அவ்வளவு எளிதில் கடந்து போக்கக்கூடியது ஆல்ல. எப்பொழுதும் ஆழ்ந்து கவனிக்க கூடிய ஒன்றாகவே இருக்கிறது. அதாவது நாம் செய்யக்கூடிய செயலுக்கும் பேசக்கூடிய வார்த்தைகளுக்கும் அதிக அளவில் சக்தி இருப்பதை நாம் பல நேரங்களில் காணலாம்.

அதனால் தான் முன்னோர்கள் நல்லதை செய்தும் நல்லதை பேசியும் வாழ வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். அந்த வகையில் ஒருவருடைய வீடுகளில் செய்கின்ற குறிப்பிட்ட சில ஐந்து விஷயங்கள் அந்த வீட்டிற்குள் நல்ல அதிர்வலைகள் நுழைவதை தடுத்து நிறுத்தப்படும் என்று சொல்கிறார்கள். அதைப்பற்றி பார்ப்போம்.

தவறியும் இந்த 5 விஷயங்களை வீடுகளில் செய்யாதீர்கள்.. கடன் பிரச்சனை வருமாம் | Doing 5 Things Daily Will Block Positive Energy

கருட புராணம்: அகால மரணம் அடைந்தவர்களின் ஆன்மா எங்கே செல்லும்?

கருட புராணம்: அகால மரணம் அடைந்தவர்களின் ஆன்மா எங்கே செல்லும்?

1. நம் வீடுகளில் மட்டுமல்லாமல் நம் சுற்றி உள்ள மனிதர்கள் யாரிடமும் அவ்வளவு கடினமான வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள். இவை நம்முடைய நல்ல அதிர்வலைகளை மிகப்பெரிய அளவில் பாதிக்கக்கூடும். அதோடு, கிடைக்கின்ற அதிர்ஷ்டமும் கைகளுக்கு வராமலே போகும்.

2. நம்முடைய மனம் எப்பொழுதும் சுத்தமாகவும் அமைதியாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு அமைதியான உள்ளம் பெற வேண்டுமென்றால் போட்டி, பொறாமைகள், கோபம் போன்றவற்றை மனதில் இருந்து அகற்றி விட வேண்டும். எந்த உள்ளம் அமைதி பெற்று இருக்கிறதோ அங்கு தான் இறைவன் குடிக்கொள்கின்றான்.

3. எந்த கால நிலையிலும் பெற்றவர்களை மற்றும் ஆசிரியர்களை அவமானம் செய்வது கூடாது. அதை போல் நமக்கு தெரியாத ஒரு விஷயத்தை ஒருவர் கற்றுக் கொடுக்கும் பொழுது அவர்களையும் நாம் எந்த நிலையிலும் உதாசீனம் செய்யக்கூடாது. இது நமக்கு மிகப்பெரிய அளவில் குரு தோஷத்தை உண்டு செய்யும்.

தவறியும் இந்த 5 விஷயங்களை வீடுகளில் செய்யாதீர்கள்.. கடன் பிரச்சனை வருமாம் | Doing 5 Things Daily Will Block Positive Energy

2026 மாசி மகம் எப்பொழுது? அன்று என்ன செய்ய வேண்டும்?

2026 மாசி மகம் எப்பொழுது? அன்று என்ன செய்ய வேண்டும்?

 4. மனிதர்களாகிய நாம் எப்பொழுதும் சுறுசுறுப்பாக சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். சோம்பேறியாக இருப்பது என்பது நம்முடைய வாழ்க்கையை மட்டுமல்லாமல் வீடுகளில் ஒரு தீய ஆற்றலை அவை உருவாக்கும்.

5. முடிந்த வரை நாம் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். நம் மனதிற்கு அமைதி தரக்கூடிய ஒரு சூழலை உருவாக்க வேண்டும். அப்பொழுதுதான் நாமும் சுறுசுறுப்பாக வேலை செய்வோம். நம்மை சுற்றி நல்ல அதிர்வலை உண்டாகும்.

இந்த பிரபஞ்சத்தில் மனிதர்கள் செய்யக்கூடிய சிறு சிறு செயல்களுக்கும் எதிர் வினை இருக்கிறது. நன்மை அல்லது தீமை எதை செய்தாலும் நாம் செய்துவிட்டு எளிதாக கடந்து விட முடியாது.

கட்டாயம் நாம் செய்த காரியத்திற்காக ஒரு நாள் இந்த பிரபஞ்சத்திற்கு பதில் சொல்லி ஆக வேண்டிய நிலை இருக்கிறது. ஆதலால் செயல்களிலும் சொற்களிலும் கவனம் செலுத்தி நல்ல அதிர்வலைகளை பெற்று அதிர்ஷ்டமான வாழ்க்கையை வாழ்வோம். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US