2025 மகா கந்தசஷ்டி எப்பொழுது? மறந்தும் செய்யக்கூடாத சில முக்கிய விஷயங்கள்
முருகப்பெருமானுக்கு உரிய விரதங்களில் சஷ்டி விரதம் மிக முக்கியமான விரதம் ஆகும். மாதம் தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறை இரண்டு சஷ்டி திதிகள் வந்தாலும் ஐப்பசி மாதம் வளர்பிறையில் வரக்கூடிய சஷ்டி திதியில் தான் முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்து தேவர்களை காத்ததாக புராணங்கள் கூறுகின்றது.
இதனால் இதை மகா கந்த சஷ்டி விழாவாக எண்ணி பக்தர்கள் இந்த நாளில் விரதம் இருந்து தங்களுடைய துன்பம் போக்கி தங்களை காத்தருள முகப்பெருமானை வழிபாடு செய்வார்கள். அப்படியாக இந்த 2025 ஆம் ஆண்டு கந்த சஷ்டி விரதம் அக்டோபர் 22ஆம் தேதி துவங்கி அக்டோபர் 27ஆம் தேதி வரை அனுஷ்டிக்கப்படுகிறது.
அதாவது அக்டோபர் 27ஆம் தேதி சூரசம்ஹார நிகழ்வும் அக்டோபர் 28ஆம் தேதி முருகப்பெருமானுடைய திருக்கல்யாண நிகழ்வு நடைபெறுகிறது. வாழ்க்கையில் சந்திக்கின்ற இன்னல்கள் விலகி முருகப்பெருமானுடைய அருளால் வாழ்க்கையில் மேன்மை பெறுவதற்காக பக்தர்கள் பலரும் தங்களுடைய பிரார்த்தனைகளை வைத்து இந்த கந்த சஷ்டி விரதத்தை கடைபிடிப்பார்கள்.
இந்த மகா கந்த சஷ்டி விரதத்தை முடிந்தவர்கள் முருகப்பெருமானுக்கு 48 நாள் கந்த இருப்பார்கள். அதாவது செப்டம்பர் 10ஆம் தேதி துவங்கி விரதம் கடைபிடித்து 48 நாட்கள் விரதம் இருப்பார்கள். அவ்வாறு விரதம் இருக்க முடியாதவர்கள் 21 நாட்கள் விரதம் இருப்பார்கள். அவர்கள் அக்டோபர் 10ஆம் தேதி விரதத்தை துவங்கி இருப்பார்கள்.
இவ்வளவு நீண்ட நாட்கள் தங்களுடைய விரதம் கடைபிடிக்க முடியாதவர்கள் சஷ்டி விழா நடைபெறும் 7 நாட்களுக்கு அதாவது ஐப்பசி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை திதியில் துவங்கி சஷ்டி அன்று நடைபெறும் சூரசம்ஹாரம் வரை கடைபிடித்து சூரசம்ஹாரம் முடிந்து அன்று சிலர் விரதம் நிறைவு செய்வார்கள்.
இன்னும் சிலர் திருக்கல்யாணம் அன்று விரதத்தை நிறைவு செய்வார்கள். அப்படியாக கந்த சஷ்டி விரதத்தை ஆறு நாட்கள் கடைபிடிப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய கூடாது? என்பதை பற்றிய விவரங்களை பார்ப்போம்.
1. சஷ்டி விரதம் ஆறு நாட்கள் இருப்பவர்கள் கட்டாயம் வீடுகளில் அசைவம் சமைக்கவும் சாப்பிடவும் கூடாது.
2. அதோடு புகை, மது, எடுக்கக் கூடாது.
3. கால்களின் கட்டாயம் செருப்பு அணியக்கூடாது.
4. விரதம் இருப்பவர்கள் பகல் நேரங்களில் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.
5. தீட்டு வீட்டிற்கு செல்லக்கூடாது. கடைகளிலும் அவர்கள் உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது.
6. சஷ்டி விரதம் இருப்பவர்கள் விரத நாட்களில் சுத்தமான தரையில் அல்லது தரையில் துணி விரித்து உறங்க வேண்டும்.
7. கந்த சஷ்டி விரதம் ஆறு நாட்கள் இருப்பவர்கள் கட்டாயம் தினமும் தலைக்கு குளிக்க வேண்டும்.
8. விரதம் இருப்பவர்கள் முடிந்தவரை சிவப்பு, பச்சை, மஞ்சள் நிற ஆடைகளை உடுத்தலாம்.
9. சஷ்டி விரதம் இருப்பவர்கள் வெளியே சென்று வீடு திரும்பும் பொழுது கட்டாயம் குளிக்க வேண்டும்.
10. கணவன் மனைவி இருவரும் தாம்பத்திய உறவுகளில் சஷ்டி விரதத்தின் பொழுது ஈடுபடக்கூடாது.
11. அலுவலகத்திலும் குடும்பத்திலும் தேவையில்லாத வார்த்தைகளும் வாக்குவாதத்தையும் செய்யக்கூடாது.
12. பெண்கள் சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டால் அவர்கள் பூஜை அறைக்கு செல்லாமல் வீட்டில் உள்ளவர்களை தீபம் ஏற்ற சொல்லி வழிபாடு செய்யலாம்.
13. சஷ்டி விரதம் இருப்பவர்கள் வீடுகளில் கலசம் வைக்காமலும் காப்பு கட்டாமலும் முருகப்பெருமான் படம் மட்டும் வைத்து கூட வழிபாடு செய்யலாம்.
14. அதை போல் சஷ்டி விரதத்தின் பொழுது காலை நேரத்தில் சுவாமிக்கு படைக்கும் நெய்வேத்தியம் மாலை வேலையில் வைக்கக்கூடாது. புதிதாக நெய்வேத்தியம் படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
15. முருகப்பெருமானின் சூரசம்ஹாரம் நிகழ்வை வீடுகளில் இருந்து பார்ப்பவர்களாக இருந்தாலும் கோவிலுக்கு சென்று பார்பவர்களாக இருந்தாலும் அதை பார்த்து முடித்து வீடு திரும்பும் பொழுது கட்டாயம் தலைக்கு குளிக்க வேண்டும்.
16. அதோடு விரதம் இருப்பவர்களும், விரதம் இல்லாதவர்களும் முருகப்பெருமானுடைய பக்தர்களாக இருந்து சூரசம்ஹாரம் நிகழ்வை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் கட்டாயம் சூரசம்ஹாரம் முடிந்த பிறகு பால் அருந்துவது நன்மை அளிக்கும்.
17. அதோடு ஏழாம் நாள் திருக்கல்யாண வைபவம் முடிந்த பிறகு தான் கந்த சஷ்டி விரதம் பூர்த்தி செய்ய வேண்டும்.
18. விரதம் இருப்பவர்கள் வீடுகளில் உணவுகளை குறைத்து தண்ணீர் அதிகம் குடிப்பது அவர்கள் உடல் நிலைக்கும் அவர்களுடைய ஆன்மீக சிந்தனைக்கும் நல்ல பலன் அளிக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







