சீக்கிரமே காதல் தோல்வியில் முடியக்கூடிய 4 ராசிகள் - யாரெல்லாம்?
காதலில் ஆர்வத்தை இழந்து, சீக்கிரமே அதிலிருந்து விலகிவிடும் ராசிகள் குறித்து பார்ப்போம்.
ஜோதிடத்தின் படி, சில ராசிக்காரர்கள் இயல்பாகவே தங்கள் உறவுகளில் எளிதில் சலிப்படைபவர்களாக இருப்பார்கள். அவர்களை காதலிப்பது என்பது மிகவும் சவாலான விஷயம்.
அவ்வாறு எந்தெந்த ராசிக்காரர்களின் காதல் விரைவில் முறிந்து விடும் என்று தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
அதிகாரம் செலுத்துவதில் விருப்பம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இது அவர்களுக்கு சமரசம் செய்து காதலில் ஈடுபடுவதை சவாலாக மாற்றும். எனவே அதிகாரம் குறைவது போல் உணர்ந்தால் உடனடியாக அந்த உறவிலிருந்து வெளியேறி விடுவார்கள்.
மிதுனம்
எளிதில் சலிப்படையும் குணத்திற்கும் பெயர் பெற்றவர்கள். வாழ்க்கையில் எப்போதும் உற்சாகத்தையும், பல்வேறு வாய்ப்புகளையும் விரும்புகிறார்கள். இதுவே அவர்களை உறவுகளில் எளிதில் சலிப்படைய வழிவகுக்கும்.
தனுசு
சுதந்திரத்தை மிகவும் மதிப்பவர்கள். அவர்களின் உறவு அவர்களின் சுதந்தரத்தை பறிப்பதாக உணர்ந்தால் அதிலிருந்து விரைவில் வெளியேறி விடுகிறார்கள்.
கும்பம்
துணையின் தேவைகளை விட அவர்களின் சொந்த தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். அவர்களின் ஆர்வத்தை மதிக்கா விட்டாலோ அல்லது அவர்களின் செயல்களுக்கு தடை விதித்தாலோ உறவை கைவிடுகிறார்கள்.