வீடுகளில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க முன்னோர்கள் கூறிய பரிகாரங்கள்
வீடு என்பது வெறும் அழகுப் பொருட்களை வைத்து அலங்காரம் செய்வது மட்டுமே அல்ல. வீடு என்பது ஒரு நல்ல நேர்மறை ஆற்றல் கொண்டும் ஒருவர் வீட்டிற்குள் வரும் பொழுது ஒரு நல்ல அதிர்வலைகளை உணரும் படி இருக்க வேண்டும். இதற்கு ஆன்மீக ரீதியாக நிறைய விஷயங்களை நாம் பின்பற்ற வேண்டும்.
அதில் முக்கியமாக நாம் வீடு கட்டும் பொழுது வாஸ்து முறைப்படி கட்டுவது அவசியம். அதேபோல் காலை மாலை நேரங்களில் விளக்கு ஏற்றுவது, வீடுகளில் தீய சொற்கள் பேசாமல் இருப்பது, குடும்பத்தினர் இடையே ஒற்றுமை நிலவுவது, பெண் குழந்தைகளை அவமானம் செய்யாமல் இருப்பது, ஏழை எளியவர்களுக்கு தானதர்மம் செய்வது, வஞ்சகம் இல்லாத உள்ளம் கொண்டிருப்பது போன்ற நிலைமையில் தான் ஒரு வீட்டில் நேர்மறை ஆற்றல் நிறைந்து இருக்கும்.

அதாவது கட்டிய வீடு பல கோடி ரூபாயாக இருந்தாலும் அல்லது மண் வீடாக இருந்தாலும் வீட்டில் இருக்கக்கூடியவர்களுடைய எண்ணம் மற்றும் வீட்டினுடைய பராமரிப்பு தான் அந்த குடும்பத்தினருடைய எதிர்காலத்தை நிர்ணிக்கிறது. அப்படியாக நம்முடைய வீடுகளில் எப்பொழுதும் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க முன்னோர்கள் பல வழிமுறைகளை நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
அதில் ஒரு முக்கியமான பரிகாரம் பற்றி பார்ப்போம். ஒரு சிறிய மண் கலசம் எடுத்து கொண்டு அதில் சிறிது உப்பு, சர்க்கரை, பச்சரிசி, புளி, பருப்பு, நவதானியம், புனுகு, குங்குமப்பூ. கஸ்தூரி. ஜவ்வாது, ஐம்பொன் சிறிய வலம்புரி சங்கு, வெற்றிலை பாக்கு என்று எல்லாவற்றையும் வியாழக்கிழமை அன்று நாம் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு வெள்ளிக்கிழமை அன்று காலையில் 6 முதல் 7 மணிக்குள் மேற்சொன்ன அனைத்து பொருட்களையும் கலசத்தில் போட்டு மண் கலசத்திற்கு விபூதி, சந்தனம் குங்குமம் வைத்து பூஜை அறையில் மகாலட்சுமியை மனதார வேண்டிக்கொண்டு பிரார்த்தனை செய்ய வேண்டும்.
பிறகு தீபம் தூபம் காட்டி கீழ்கண்ட மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்து கலசத்தை மூடி பூஜை அறையில் வைத்து விட வேண்டும். பிறகு ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் 108 முறை இந்த மந்திரத்தை நாம் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நிச்சயம் வெகு விரைவில் உங்கள் வீடுகளில் நல்ல மாற்றத்தை காணலாம்.

மந்திரம்:
" ஒம் தன தான்ய லஷ்மியை வசி வசி வசியை நமஹ"
மேற்கண்ட பரிகாரங்களை செய்ய முடியாதவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் இந்த மந்திரத்தை நீங்கள் 108 முறை பாராயணம் செய்தும் அல்லது இதற்கென்று தனியாக ஒரு புத்தகம் போட்டு 108 முறை இந்த மந்திரத்தை உங்கள் கைகளால் எழுதி வந்தாலும் மகாலட்சுமியின் பரிபூரண அருளை நீங்கள் பெற்றுவிடலாம். உங்கள் வீடுகளில் இருக்கக்கூடிய வறுமை நீங்கி செல்வம் உங்களை தேடி வரும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |