வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்க பின் பற்றிய வேண்டிய எளிய வாஸ்து குறிப்புகள்

By Sakthi Raj Jul 04, 2025 05:56 AM GMT
Report

ஜோதிடத்தில் வாஸ்து என்பது மிக முக்கியமாக பார்க்கக்கூடிய விஷயம் ஆகும். அதாவது வாஸ்து ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சி, பொருளாதார வளர்ச்சி இவற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. அப்படியாக, நம் வீட்டில் மகிழ்ச்சி உண்டாக நாம் பின்பற்ற வேண்டிய முக்கியமான வாஸ்து குறிப்புகள் பற்றிப் பார்ப்போம்.

நம் வீடு எப்பொழுதும் வெளிச்சம் நிறைந்த வீடாக இருக்க வேண்டும். நம்முடைய இந்து மதத்தில் எந்த வீடு இருள் சூழ்ந்து இருக்கிறதோ அங்கு மகிழ்ச்சி நிலைப்பது இல்லை என்று சொல்வது உண்டு. அப்படியாக, நம் வீடுகளில் விளக்கு ஏற்றி ஜன்னல்களை சுத்தம் செய்து அதை திறந்து வைத்து வெளிச்சம் நிறைந்த வீடாக வைத்துக்கொள்வது மிக மிக அவசியம் ஆகும்.

வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்க பின் பற்றிய வேண்டிய எளிய வாஸ்து குறிப்புகள் | Easy Vastu Tips For Happy Home In Tamil

நம் வீடுகளில் எப்பொழுதும் தேவை இல்லாத பொருட்களை அடைத்து வைப்பதை தவிர்க்க வேண்டும். முடிந்த அளவு வீடுகளை சுத்தமாக வைத்து கொள்வதால் நேர்மறை சக்திகள் சூழ்ந்து மன நிம்மதி கொடுக்கிறது.

நம் வீட்டு வாசலில் செடிகள் வைப்பது நல்ல அதிர்வலைகளை வழங்குகிறது. இதனால் நமக்கும் வீட்டிற்கு உள்ளே வருபவர்களுக்கும் மகிழ்ச்சியான மனநிலை உண்டாகுகிறது. மிக முக்கியமாக நம் வீடுகளில் அடிக்கும்  பெயிண்ட் நம் வாழ்க்கைக்கு நெருங்கிய தொடர்பு கொண்டதாக இருக்கிறது.

கிரக தோஷங்கள் விலக செய்யவேண்டிய முக்கியமான பரிகாரம்

கிரக தோஷங்கள் விலக செய்யவேண்டிய முக்கியமான பரிகாரம்

 

அதனால் நாம் தேர்ந்தெடுக்கும் பெயிண்ட் கலரில் அதிக அளவில் கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்க மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தை பயன்படுத்தலாம்.

வீட்டின் அமைதிக்கு பச்சை மற்றும் நீல நிறத்தை பயன்படுத்தலாம். வீட்டில் நல்ல தாவரங்கள் வளர்ப்பதால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கிறது. அவை காற்றை சுத்திகரித்து வீட்டில் உள்ளவர்களுக்கு நிம்மதி அளிக்கிறது.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US