எதிரிகள் தொல்லை விலக மிளகு பரிகாரம்
இந்த பரிகாரத்தை பைரவருக்கு உகந்த அஷ்டமி அல்லது திங்கட்கிழமையில் செய்யலாம்.மாதத்திற்கு ஒருமுறை செய்தால் போதும்.
அதிகமாக எதிரிகளின் தொல்லை இருக்கிறது என்று நினைப்பவர்கள் திங்கட்கிழமை தோறும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.
ராகு காலம், எமகண்ட நேரம் இவற்றை தவிர்த்து விட்டு மீதம் இருக்கும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தங்களின் வசதிக்கேற்ப இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம்.
இந்த பரிகாரத்திற்கு நமக்கு நல்ல மிளகாக பார்த்து 27 மிளகுகள் வேண்டும். பிறகு ஒரு கண்ணாடி டம்ளர் வேண்டும். வீட்டு பூஜை அறையில் ஒரு கண்ணாடி டம்ளரில் சுத்தமான தண்ணீர் பாதி அளவு இருக்கும்படி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
நல்ல மிளகாக பார்த்து 27 மிளகுகளை ஒரு தட்டில் வைத்து விடுங்கள். எப்பொழுதும் போல் வீட்டில் விளக்கேற்றி தெய்வப் படங்களுக்கு மலர்களை சூட்டிக்கொள்ள வேண்டும்.
அடுத்ததாக ஏதாவது ஒரு நெய்வேத்தியத்தை தெய்வத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
இப்படி செய்து முடித்த பிறகு கிழக்கு அல்லது வடக்கு முகமாக பார்த்து அமர்ந்து கொண்டு உங்களுக்கு யாரால் என்ன பிரச்சனை என்பதை மனதார வேண்டிக் கொண்டு ஒவ்வொரு மிளகாக எடுத்து அந்த தண்ணீரில் போட வேண்டும்.
ஒவ்வொரு முறையும் எதிரியால் ஏற்பட்ட பிரச்சினை நீங்க வேண்டும் என்று மனதார நினைத்துக் கொண்டு பொறுமையாகவும் நிதானமாகவும் ஒவ்வொரு மிளகாக அந்த தண்ணீருக்குள் போட வேண்டும்.
இப்படி 27 மிளகுகளையும் போட்டு முடித்த பிறகு மறுபடியும் உங்களுடைய வேண்டுதலை கூற வேண்டும்
.பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி அந்த மிளகு இருக்கும் தண்ணீரை அப்படியே எடுத்து பூஜை அறையில் ஓரமாக வைத்து விடுங்கள்.
ஒரு மணி நேரம் கழித்து இந்த தண்ணீரை எடுத்து ஓடுகின்ற நீரில் ஊற்றி விட வேண்டும். அருகில் ஓடுகின்ற நீர் இல்லாத பட்சத்தில் பாத்திரம் தேய்க்கும் சிங்கிலும் இந்த தண்ணீரை ஊற்றி விடலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







