விதியை வெல்ல தினமும் காலையில் இந்த பாடலை பாடினால் விரைவில் பலன் கிடைக்குமாம்

By Sakthi Raj Aug 30, 2026 02:00 PM GMT
Report

இந்த உலகத்தில் மனிதர்கள் வாழ்க்கை விதியால் கட்டமைக்கப்பட்டது. இருப்பினும் நாம் வாழ்கின்ற நாட்களில் அந்த விதியை நாம் எவ்வாறு போராடி வெல்கின்றோம் என்பதில் தான் உண்மையான வாழ்க்கை இருக்கிறது. நிச்சயம் இந்த உலகத்தில் மாற்றக்கூடிய ஒரே ஒரு சக்தி இறை வழிபாடு மட்டும்தான்.

பூர்வ ஜென்மத்தில் எவ்வளவு பெரிய பாவங்கள் செய்திருந்தாலும் இந்த ஜென்மத்தில் தொடர்ந்து நாம் செய்யக்கூடிய வழிபாட்டினாலும் இறைவன் அருகில் செல்ல முடியும் விதியையும் மாற்றி அமைக்க முடியும். அப்படியாக, உலகத்தை தன்னுள் வைத்திருக்கும் அன்னை அபிராமியை வழிபாடு செய்ய வாழ்க்கையில் எல்லா செல்வ வளமும் பெறலாம்.

வாஸ்து: வீடுகளில் குளவி தேனீ புறாக்கள் கூடு கட்டினால் ஆபத்து வருமா?

வாஸ்து: வீடுகளில் குளவி தேனீ புறாக்கள் கூடு கட்டினால் ஆபத்து வருமா?

விதியை வெல்ல தினமும் காலையில் இந்த பாடலை பாடினால் விரைவில் பலன் கிடைக்குமாம் | Fate Changing Abirami Anthathi Song

அந்த வகையில், நம்முடைய விதியை மாற்றி அமைக்கக்கூடிய இந்த பாடலை தினமும் பாடிவர நிச்சயம் எப்பேர்பட்ட விதி பயன்கள் இருந்தாலும் அதை நாம் மாற்றி எழுத முடியும். அதை பற்றி பார்ப்போம்.

விதியை வெல்ல தீவினைகள் நீங்க:

பாடல்:

தங்குவர், கற்பக தாருவின் நீழலில், தாயர் இன்றி|
மங்குவர், மண்ணில் வழுவாப் பிறவியை, மால் வரையும்|
பொங்கு உவர் ஆழியும், ஈரேழ் புவனமும், பூத்த உந்திக்|
கொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே.

இந்த பாடலை தினமும் மனதார பாடி வர நிச்சயம் அன்னை அபிராமியின் அருளால் வாழ்க்கை மிகப்பெரிய அளவில் மாற்றத்தை பெறும். விதியை மாற்றக்கூடிய வல்லமையை நாம் பெறலாம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US