இன்றைய ராசி பலன்(11.02.2025)

Report

மேஷம்:

இன்று உங்களுக்கு திடீர் உடல் உபாதைகள் உருவாகலாம்.சிலருக்கு அலுவலகத்தில் சில பிரச்சனைகள் உருவாகும்.சகோதிரி வழியில் நல்ல ஆதரவு கிடைக்கும்.நன்மையான நாள்.

ரிஷபம்:

மாணவர்கள் படிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள்.தொழிலில் உண்டான சங்கடம் மதியம் மேல் சரி ஆகும்.நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.ஒரு சிலருக்கு புதிய நபரின் அறிமுகத்தால் ஆதாயம் உண்டாகும்.

மிதுனம்:

உங்களுக்கு இன்று பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும்.சிலருக்கு மனக்கவலைகள் உண்டாகும்.பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள்.எதையும் சுயமாக சிந்தித்து செயல்படுவது நல்லது.

கடகம்:

தேவையற்ற குழப்பம் உண்டாகும். முயற்சியில் தடை ஏற்படும். சிந்தித்து செயல்படுவதால் சிரமம் குறையும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். உங்கள் அணுகுமுறை லாபம் தரும்.

சிம்மம்:

மனதில் அமைதி உண்டாகும்.உடல் உபாதைகள் சரி ஆகும்.இன்று நீங்கள் புதிய திட்டம் அல்லது முயற்ச்சிகள் எதுவும் எடுக்க வேண்டாம்.நண்பர்கள் உங்களுக்கு தக்க சமயத்தில் உதவி செய்வதால் வெற்றி பெறுவீர்கள்.

கன்னி:

எடுத்த வேலை வெற்றியாகும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். எதிர்பார்த்த பணம் வரும். சங்கடத்தில் இருந்து விடுபடுவீர்.இழுபறியாக இருந்த வேலை நடக்கும்.பணவரவு திருப்தி தரும்.

துலாம்:

இன்று மனதில் தெளிவும் உற்ச்சாகமும் உண்டாகும்.சிலர் விலையுயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.தாய் தந்தை வழியில் நல்ல ஆதரவு கிடைக்கும்.நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

அஸ்தமனமாகும் சனி.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 4 ராசிகள்

அஸ்தமனமாகும் சனி.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 4 ராசிகள்

விருச்சிகம்:

உங்கள் முயற்சியில் உள்ள தடை விலகும். பெரியோர் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த வரவு வரும்.தொழிலில் ஏற்பட்ட பிரச்னையை லாவகமாக கையாள்வீர். முயற்சி லாபம் தரும். நேற்று இருந்த நெருக்கடி நீங்கும்.

தனுசு:

இன்று பணியில் நீங்கள் கவனமாக செயல்படவேண்டிய நாள்.எந்த ஒரு புதிய முயற்சிகளையும் எடுக்கவேண்டாம்.சிலருக்கு தேவைற்ற குழப்பம் மனதில் உண்டாகும்.

மகரம்:

பூமி சம்பந்தமான பிரச்னை தீரும். உங்கள் எதிர்பார்ப்பு இன்று எளிதாக நிறைவேறும். நண்பர்களால் லாபம் காண்பீர்.வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும். மனக்குழப்பம் விலகும்.

கும்பம்:

உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர்.குடும்பத்தினரின் விருப்பம் நிறைவேறும்.உங்கள் செயல் வெற்றியாகும்.

மீனம்:

இன்று நீங்கள் பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.பூர்விக சொத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும்.உறவினர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.இறைவழிபாட்டில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

   

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US