இன்றைய ராசி பலன்(25.02.2025)
மேஷம்:
இன்று இவர்களுக்கு உடல் சோர்வு உண்டாகும்.எதிலும் மிக கவனமாக இருந்து செயல் படவேண்டும்.பழைய பிரச்சன்னை ஒன்று மீண்டும் தொடங்கலாம்.முருகன் வழிபாடு நற்பலன்களை கொடுக்கும்.
ரிஷபம்:
இன்று வேகத்துடனும் விவேகத்துடனும் செயல்படவேண்டும்.ஒரு சிலருக்கு முன்றாம் நபரால் வெற்றிகள் கிடைக்கும்.ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.தொழிலில் நல்ல லாபம் பெறுவீர்கள்.
மிதுனம்:
வேலையில் உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம்.தாய் மகன் இடையே கருத்து வேறுபாடு உருவாகும்.நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.நிதானத்தோடு செயல்படுவது அவசியம்.
கடகம்:
வாய்ப்பு தேடிவரும். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.நவீன பொருள் வாங்குவீர். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்னை விலகும்.
சிம்மம்:
இன்று வியாபாரத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள்.கணவன் மனைவி இடையே நல்ல பந்தம் உருவாகும்.இன்று பிறரிடம் கோபம் கொள்ளாமல் நிதானமாக இருப்பது அவசியம்.
கன்னி:
குல தெய்வத்தின் அருளால் எடுத்த வேலை நடந்தேறும். உறவினர்கள் உதவி கிடைக்கும். உங்கள் செல்வாக்கு உயரும்.வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. வருமானம் இழுபறியாகும்.
துலாம்:
இன்று மனதில் இறை சிந்தனை அதிகரிக்கும்.நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெரும்.குடும்பத்தினர் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.நல்ல செய்தி உங்களை தேடி வரும்.
விருச்சிகம்:
முயற்சி வெற்றியாகும். கனவு நனவாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த வருவாய் வரும். பழைய கடன்களை அடைப்பீர்.முதலீட்டிற்கு ஏற்ப லாபம் உண்டாகும்.
தனுசு:
உங்கள் விருப்பம் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பழைய கடன்களை அடைப்பீர்.ஒரு சிலருக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்னை உண்டாகும்.
மகரம்:
திட்டமிட்ட வேலைகளை மாற்றம் செய்வீர். எதிர்பார்த்த வருவாய் இழுபறியாகும். மனம் குழப்பம் அடையும். நினைத்ததை அடைய வேண்டுமென்று துணிச்சலுடன் செயல்படுவீர். எதிர்பாராத நெருக்கடி தோன்றும்.
கும்பம்:
புதிய முயற்சி இழுபறியாகும். உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். பயணத்தில் நிதானம் தேவை.வரவு செலவில் நெருக்கடி உண்டாகும். திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.
மீனம்:
குடும்பத்தில் உண்டான பிரச்சனை முற்றிலுமாக விலகும்.இறைவழிபாடு உங்களுக்கு சிறந்த பலனை தரும்.சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் உருவாகும்.இன்று சில சந்தோஷமான நிகழ்வுகள் நடக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |