கலியுகம் குறித்து விஷ்ணு புராணம் சொல்வது என்ன?
நாம் பேச்சு வழக்கில் ஏதெனும் அநியாயம் நடந்தால் கலியுகம் முற்றி விட்டது என்று சொல்வது உண்டு.அதற்கு காரணம் மனிதன் தன்னை அறியாமல் எதற்கும் அஞ்சாமல் மனிதாபிமானம் இல்லாமல் வாழ்வது தான்.அப்படியாக கலியுகம் குறித்து விஷ்ணு புராணத்தில் குறிப்பிடபட்டுள்ள 4 கணிப்புகள் பற்றி பார்ப்போம்.
1.மனிதன் பணம் மோகத்தால் சூழப்படுவான்.சக மனிதர்களுக்கான மரியாதை குறையும்.பணம் வைத்தே உறவுகளும் நட்பும் உருவாகும்.அந்த பணம் அதிகம் ஆகும் பொழுது அவன் தலைக்கனமும் ஆணவமும் அதிகரிக்கும்.
2.கலியுகத்தில் மனிதன் பணம் பின்னாளில் மட்டும் தான் ஓடுவான்.அதை சேர்ப்பதற்கு அவன் எதையும் செய்வான்.சம்பாதித்த பணத்தில் பெரிய வீடுகள் கட்டி அந்த வீட்டை கொண்டு மதிப்பை தேடி கொள்வான்.
3.கலியுகம் முற்றும் பொழுது அநியாயங்கள் அதிகரிக்கும்.திருட்டு, கொள்ளை, கொலை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதால் அமைதியின்மை சூழல் உருவாகும். ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வார்கள்.
4.விஷ்ணு புராணம் படி கலியுகத்தில் இயற்கை மரணம் தாண்டி அகால மரணம் அதிகரிக்கும்.கலியுகத்தில் காலநிலை வேகமாக மாறும். இயற்கை சீற்றங்கள் அதிகரிக்கும்.நோய் தோற்று அதிகரிக்கும்.திடீர் விபத்துகளும் அதிகரிக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |