வெள்ளிக்கிழமை நாம் மறந்தும் செய்யக்கூடாதவை
வெள்ளிக்கிழமையில் ஒட்டடை அடிக்கக் கூடாது.
எனவே வியாழக்கிழமையே ஒட்டடை அடித்து வீட்டை சுத்தம் செய்வது நல்லது.
வெள்ளிக்கிழமையன்று பெண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். ஆனால் ஆண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது.
வெள்ளிக்கிழமையன்று முடி வெட்டவோ, முகச்சவரம் செய்யவோ, நகம் வெட்டவோ கூடாது.
பூஜை செய்யத் தேவையான பொருட்களை வெள்ளிக்கிழமைகளில் சுத்தம் செய்யக் கூடாது. முடிந்தவரை பூஜை அறைப் பொருட்களை முந்தைய தினமே சுத்தம் செய்து வைத்துக் கொள்வது நல்லது.
வெள்ளிக்கிழமையில் உப்பு, தயிர், பருப்பு,ஊசி போன்ற மகாலட்சுமி வாசம் செய்யும் பொருட்களை கடனாக கொடுக்கவோ, வாங்கவோ கூடாது.
வெள்ளக்கிழமை மாலை நேரத்தில் வீட்டை இருள் சூழ்ந்ததாக வைத்திருக்கக் கூடாது.
வெள்ளிக்கிழமையில் பெண்கள் தாங்கள் அணிந்திருக்கும் ஆபரணங்களை கழற்றவோ அல்லது சுத்தம் செய்யவோ கூடாது.
வெள்ளிக்கிழமையில் ராகு கால நேரமான காலை 10.30 முதல் பகல் 12 வரையிலான நேரத்தில் வீட்டில் விளக்கேற்றக் கூடாது.
இதனால் வீட்டில் கலகம் ஏற்படும். பழைய துணிகளை வெள்ளிக்கிழமையில் தைக்கக் கூடாது.
வெள்ளிக்கிழமையில் அழுக்கு துணிகளை சேர்த்து வைக்கக் கூடாது. கடன் சுமை அதிகரிக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |