ராமாயணத்தை படித்த முழு பலனை கொடுக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரம்

By Sakthi Raj Mar 26, 2026 08:51 AM GMT
Report

மகாவிஷ்ணுவின் அவதாரமாக இருக்கக் கூடியவர் ஸ்ரீ ராமர். அப்படியாக ஸ்ரீ ராமரின் புகழ் பாடும் காவியம் தான் ராமாயணம். பல்லாயிரம் பாடல்களால் உருவான இந்த காவியத்தை படிப்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. அதே நேரம் இதை முழுவதுமாக நாம் படிக்கின்ற பொழுது நமக்கு புண்ணியமும் ஆன்மீக வலிமையும் கிடைப்பதாக சான்றோர்களின் வாக்கு.

ஆனால் இன்றைய கால ஓட்டத்தில் பலருக்கும் பொறுமையாக அதை அமர்ந்து படிக்கக்கூடிய வாய்ப்புகள் இருப்பதில்லை. இவ்வாறு நடக்கும் என்பதை முன்னதாகவே அறிந்தாலே காஞ்சி மகா பெரியவர் என்று அழைக்கப்படும் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் ராமாயணத்தை 10 வரிகளைக் கொண்ட பாடலாக சில வினாடிகளிலே படித்த முடிக்கும் வகையில் இந்த உலகத்திற்கு வழங்கி இருக்கிறார்.

ராமாயணத்தை படித்த முழு பலனை கொடுக்கக் கூடிய சக்தி வாய்ந்த மந்திரம் | Full Ramayanam In 10 Lines Mantras For Chanting 

2026 ராமநவமி: வாழ்க்கையில் திடீர் மாற்றங்களை பெறப்போகும் 4 முக்கிய ராசிகள்

2026 ராமநவமி: வாழ்க்கையில் திடீர் மாற்றங்களை பெறப்போகும் 4 முக்கிய ராசிகள்

   பாடல்:

ஸ்ரீ ராமம் ரகுகுல திலகம்
சிவதனு சாக்ரிஹத சீதா ஹஸ்தகரம் அங்குல்யா பரண சோபிதம்
சூடாமணி தர்சனகரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர சைன்ய சேவிதம்
சர்வமங்கள கார்யானுகூலம்
சததம் ஸ்ரீ ராமச்சந்திர பாலயமாம்
ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஸ்ரீராம் 

ஜாதகத்தில் களத்திர தோஷம் மாங்கல்ய தோஷம் இருந்தால் என்ன நடக்கும்?

ஜாதகத்தில் களத்திர தோஷம் மாங்கல்ய தோஷம் இருந்தால் என்ன நடக்கும்?

இந்த பாடலை நாம் எத்தனை முறை வேண்டுமானாலும் பாராயணம் செய்யலாம். இதை படிக்கும் பொழுது நாம் ராமாயணம் படித்த முழு பலன் கிடைத்து ஸ்ரீ ராமரின் பரிபூரண அருளையும் பெறுகின்றோம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US