பண கஷ்டம் தீர மதியம் இந்த தீபத்தை ஏற்றுங்கள்

By Sakthi Raj 6 months ago
Report

சில நேரங்களில் தவிர்க்க முடியாத துன்பத்தால் வாழ்கை இருண்டு போயிவிடும்.அந்த நேரத்தில் நம்முடைய வெளிச்சமாக மாற்ற கூடிய ஒரே சக்தி இறைவனுக்கு மட்டுமே இருக்கிறது.என்னதான் நாம் மனதார இறைவனை வழிபாடு செய்தாலும் விளக்கு ஏற்றி வழிபடுவது என்பது சிறந்த மாற்றத்தை கொடுக்கும்.

அப்படியாக துன்பம் நேரும் பொழுது நம்முடைய வீட்டில் இந்த நெய் தீபத்தை ஏற்றி வைக்க நம்முடைய வீட்டில் ஒரு நேர்மறை ஆற்றல் உருவாகும். அப்படியாக செல்வத்திற்கு அதிபதியாக இருப்பது சுக்கிரன் மற்றும் குரு பகவான் தான்.

பண கஷ்டம் தீர மதியம் இந்த தீபத்தை ஏற்றுங்கள் | Ghee Deepam Worship

இவை இரண்டில் சுக்கிர பகவான் நம்முடைய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு மட்டுமே நமக்கு பணத்தை நமக்கு வழங்குவார் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால், குரு பகவானோ அப்படியில்லை. அவர் நம்முடைய தேவைக்கும் அதிகமாக நமக்கு பணத்தை வாரி வழங்குபவர்.

கந்த சஷ்டி 5ஆம் நாள் செய்ய வேண்டிய வழிபாடு

கந்த சஷ்டி 5ஆம் நாள் செய்ய வேண்டிய வழிபாடு

இப்படிப்பட்ட குரு பகவானை, அவருக்குரிய வியாழக்கிழமை அன்று தீபம் ஏற்றி வழிபட்டால் பணவரவு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. குரு பகவானுக்கு உரிய வியாழக்கிழமை நாளில் தீபம் ஏற்றுவது நல்லது தான். வாழ்க்கையில் பண தட்டுப்பாடு இல்லாமல் வாழ வியாழக்கிழமை என்று குரு பகவானுக்கு காலை 6 மணி முதல் 7 மணி வரைக்குள் அல்லது மதியம் 1-2க்குள் நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

இரவில் ஒருபோதும் ஏற்றக்கூடாது. சூரியன் உதயமாகி இருக்கும் சமயத்தில் ஏற்றினால் மட்டுமே நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.இந்த தீபத்தை வீட்டின் பூஜை அறையில் வடக்கு திசை நோக்கி ஏற்ற வேண்டும்.இந்த தீபம் ஆனது சுமார் ஒரு மணி நேரம் ஏற்றினால் போதும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US