பள்ளிக்கு செல்லும் முன் மஞ்சள் சரஸ்வதியை தரிசிப்பதன் அவசியம்

By DHUSHI May 28, 2024 04:00 PM GMT
Report

பொதுவாக பாடசாலை ஆரம்பிக்கும் முன்னர் கோயில்களுக்கு சென்று இறைவனை வழிப்பட்டு செல்வதை பலர் பழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில், பாடசாலை மாணவர்கள் கல்வியில் அதிக நாட்டம் காட்ட வேண்டும் என்றால் அவர்கள் தெலுங்கானா ஆதிலாபாத்தில் பஸாரா ஞானசரஸ்வதியை வழிபடுவது நல்லது.

மஞ்சள் காப்புடன் காட்சி தரும் சரஸ்வதியை வியாழக்கிழமைகளில் தரிசித்தால் கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகின்றது.

பள்ளிக்கு செல்லும் முன் மஞ்சள் சரஸ்வதியை தரிசிப்பதன் அவசியம் | Glory Of Yellow Saraswati In Tamil

அந்த வகையில், யார் இந்த மஞ்சள் சரஸ்வதி? இவரின் சிறப்புக்கள் என்னென்ன? என்பது பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

மஞ்சள் சரஸ்வதியின் வரலாறு

மகாபாரதத்தை எழுதிய வியாச மகரிஷி கோதாவரி நதிக்கரையில் தவம் செய்து கொண்டிருந்த போது சரஸ்வதி தோன்றி, “மகாலட்சுமி, பார்வதியோடு சேர்த்து எனக்கு ஒரு கோயில் கட்டுங்கள்.” என கூறியுள்ளார்.

பள்ளிக்கு செல்லும் முன் மஞ்சள் சரஸ்வதியை தரிசிப்பதன் அவசியம் | Glory Of Yellow Saraswati In Tamil

இதனை தொடர்ந்து மூன்று தேவியருக்கும் சிலை செய்து பிரதிஷ்டை செய்தார்.இதன் பின்னரே மகாபாரதத்தை எழுத ஆரம்பித்துள்ளார். இதனால் தான் அவர் வாழ்ந்த ஊருக்கு 'வியாசபுரி' என்ற பெயர் வந்துள்ளது.

காலங்கள் செல்ல செல்ல 'வஸாரா' என்றும், 'பஸாரா' என்றும் மாறியது. மூன்று நிலை ராஜகோபுரத்தை தாண்டி உள்ளே நுழைந்தால் “சூர்யேஸ்வர சுவாமி” சிவலிங்க வடிவில் தரிசணை செய்யலாம்.

பள்ளிக்கு செல்லும் முன் மஞ்சள் சரஸ்வதியை தரிசிப்பதன் அவசியம் | Glory Of Yellow Saraswati In Tamil

சாளுக்கிய மன்னர்கள் காலத்தில் இந்த கோயிலை சுற்றி எட்டு தீர்த்தங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

அதாவது ஞான சரஸ்வதி கை - வீணை, அட்சமாலை, ஏடு தாங்கியபடி வீற்றிருக்கிறார். அவர் பக்கத்தில் மகாலட்சுமியும், பிரகாரத்தில் மகா காளியும் இருக்கிறார்கள். இந்த கோயிலில் பிரசாதமாக தரப்படும் மஞ்சளை சாப்பிட்டால் புத்தி சாதுர்யம் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது.

அதே சமயம் அங்கு வியாசர் தவம் புரிந்த குகையையும் காணலாம். அப்பகுதியில் வாழும் பக்தர்கள் பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பதற்கு முன்னர் இந்த கோயிலுக்கு செல்வார்களாம்.    


ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 

+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US