குரு புதன் இணைவால் உருவாகும் நவபஞ்ச யோகம் - யாருக்கு பொற்காலம்?
ஜோதிடத்தில் குரு பகவான் ஒரு மனிதனுக்கு ஞானத்தை வழங்கக் கூடியவராகவும் நன்மையை செய்யக்கூடியவராகவும் இருக்கிறார். அந்த வகையில் 2025 டிசம்பர் 5ஆம் தேதி குரு பகவான் மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகிறார்.
டிசம்பர் 6 அன்று காலை 6. 32 மணி அளவில் குரு புதன் பகவானுடன் இணைகிறார். இந்த குரு புதன் இணைவு ஜோதிடத்தில் சிறந்த பலனை உண்டாக்கக் கூடியது. குரு புதன் இணைவு நவபஞ்ச யோகத்தை உருவாக்கி குறிப்பிட்ட 4 ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் நன்மைகளை வழங்கி பொற்காலத்தை கொடுக்க இருக்கிறார்கள். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு குரு புதன் இணைவானது அவர்களுக்கு ஒரு வகையான தெளிவை கொடுத்து சரியான முடிவை எடுக்கக்கூடிய ஒரு தன்மையை கொடுக்கப் போகிறார்கள். இவர்களுக்கு இந்த காலகட்டத்தில் பேச்சுத்தன்மை மிகச் சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலை மேம்படும். ஒரு சிலருக்கு வேலை வாய்ப்புகளில் பாராட்டுக்கள் கிடைக்கக்கூடும். வீடுகளில் உங்களுடைய வசதிகளை பூர்த்தி செய்வீர்கள். குழந்தைகளுடைய கல்வி சம்பந்தமான விஷயங்களுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய காலமாக அமையப் போகிறது.
துலாம்:
துலாம் ராசியினருக்கு குரு புதன் இணைவானது இவர்களுக்கு வாழ்க்கையை பற்றிய புரிதல் கொடுக்கப்போகிறது. நீண்ட நாட்களாக ஒரு விஷயத்திற்காக நீங்கள் காத்திருக்கிறீர்கள் என்றால் அவை அனைத்தும் உங்களுக்கு கைகூடிவரும். இந்த காலகட்டங்களில் உங்களுக்கு வேலையில் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று வருத்தம் இருந்தால் நீங்கள் நினைத்ததை விட பெயரும் புகழும் கிடைக்கக்கூடிய ஒரு பொன்னானமான காலம் ஆகும். குடும்ப உறவுகள் இடையே ஒரு நல்ல மகிழ்ச்சியான சூழல் உருவாகும் பூர்வீக சொத்தில் இருக்கக்கூடிய சங்கடங்கள் விடவும்.
மகரம்:
மகர ராசியினருக்கு குரு புதன் இணைவானது இவர்களுக்கு இவர்களைப் பற்றிய ஒரு புரிதலை கொடுக்கப் போகிறது. எதற்காக இத்தனை நாள் நாம் தொழில் ரீதியாக பின்தங்கி இருந்தோம் என்ற ஒரு உண்மை நிலையை புரியச் செய்து தொழில் ரீதியாக ஒரு சரியான முடிவை எடுக்க வைக்க கூடிய ஒரு அற்புதமான காலகட்டமாகும். திருமண வாழ்க்கையில் சந்தித்த சங்கடங்கள் விலகும். திருமண வரன் தேடிக் கொண்டிருந்தீர்கள் என்றால் நல்ல வரன் அமையும். குடும்பத்தில் பெரியவர்களுடைய ஆசிர்வாதம் கிடைக்கும். நீண்ட நாள் உடல் உபாதைகளுக்கான நல தீர்வு உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |