ரிஷப ராசியில் குருபகவான்: விபரீத ராஜயோகத்தால் நன்மைகளை அள்ளும் ராசிகள்
ரிஷப ராசியில் குருபகவான் நுழைந்திருப்பதால் விபரீத ராஜயோகம் உருவாகியுள்ளது, இதனால் நன்மைகளை பெறப்போகும் ராசிகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
துலாம் ராசி
உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் குருபகவான் பயணம் செய்து வருகின்றார். குரு பகவானால் அருளால் உங்களுக்கு நல்ல ஆடம்பர வாழ்க்கை கிடைக்ககூடும்.
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதீத வாய்ப்புகள் இருக்கிறது. வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
பண புழக்கத்தில் நல்ல மாற்றங்களும் முன்னேற்றங்களும் இருக்கும். தொழில் ரீதியாக திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
வாழ்க்கை துணையால் நல்ல ஆதரவு கிடைக்கும்
தனுசு ராசி
உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் குருபகவான் பயணம் செய்வதால் இந்த ஆண்டு முழுவதும் எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும்.வாழ்கை துணையால் நல்ல ஆதரவு இருக்கும்.
பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும்.
புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை உண்டாக்கும்.
கடக ராசி
உங்கள் ராசியில் 11-ஆவது வீட்டில் குருபகவான் பயணம் செய்யும் பொழுது வருமானத்தில் நல்லஉயர்வு லாபம் இருக்கும்.
வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவியும் உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.
திருமணம் ஆன துமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் வரன் கைகூடும்.
நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |