2026: வியப்பில் ஆழ்த்தும் 12 ராசிகளின் ரகசிய குணங்கள்.. என்ன தெரியுமா?

By Sakthi Raj Apr 14, 2026 09:33 AM GMT
Report

ஜோதிட ரீதியாக ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கும். அதை நாம் அவ்வப்போது அவர்களிடத்தில் பார்க்கலாம்.

மேலும் ஒவ்வொரு ராசிகளுக்கும் ஒரு ஆழமான குணம், விருப்பங்கள், பயம், பலவீனம், பலம் என்று அந்த ராசிக்குரிய ரகசியம் இருக்கும். அப்படியாக 12 ராசிகளுக்கு உரிய ரகசியங்கள் என்னவென்று பார்ப்போம்.

2026: வியப்பில் ஆழ்த்தும் 12 ராசிகளின் ரகசிய குணங்கள்.. என்ன தெரியுமா? | Hidden Secrets Of 12 Zodiac In Astrology

2026: பிரபல ஜோதிடர்கள் கணித்து சொல்லும் சித்திரை புத்தாண்டு ராசி பலன்கள்

2026: பிரபல ஜோதிடர்கள் கணித்து சொல்லும் சித்திரை புத்தாண்டு ராசி பலன்கள்

மேஷம்:

பொதுவாக மேஷ ராசியினர் வெளியே தைரியமாக இருப்பார்கள். ஆனால் உள்ளுக்குள் மிகவும் பயந்த குணம் கொண்டவர்கள். மேலும் இவர்களுக்கு கோபம் அதிகமாக வந்தாலும் அதை சீக்கிரம் மறந்து விடுவார்கள்.

ரிஷபம்:

ரிஷப ராசியினர் வெளியே அமைதியாக இருந்தாலும் மிகுந்த பிடிவாத குணம் கொண்டவர்கள், ஒரு உறவுகளில் முழுமையான நம்பிக்கையை எதிர்பார்ப்பவர்கள். துரோகத்தை சகித்துக் கொள்ள மாட்டார்கள்.

மிதுனம்:

வெளியே அதிகம் பேசக்கூடிய நபராக இருக்கிறார்கள். ஆனால் உள்ளுக்குள் தனிமையால் பாதிக்கப்படுபவர்கள். எப்பொழுதும் இரண்டு விதமான குணம் இருக்கும். இவர்களிடம் சொல்ல கூடிய ரகசியத்தை இவர்களால் பாதுகாக்க முடியாது.

கடகம்:

அதிக அளவில் பாசம் காண்பிப்பவராக தெரிந்தாலும் உள்ளுக்குள் பயத்துடன் வாழக்கூடியவர்கள். யாரேனும் இவர்களை காயப்படுத்தி விட்டால் அதை ஒருபோதும் இவர்கள் மறக்க மாட்டார்கள். குடும்ப ரகசியங்களை எந்த நிலையிலும் வெளியில் சொல்லாதவர்கள்.

சிம்மம்:

வெளியில் பெருமையை தேடுபவராக இருப்பார்கள். ஆனால் உள்ளுக்குள் பாராட்டுகளை அதிகம் விரும்புபவர்கள். இவர்களை யாரும் கவனிக்கவில்லை என்றால் மனம் உடைந்து போவார்கள். அன்பிற்காக நிறைய தியாகங்களை செய்ய முயல்பவர்கள்.

கன்னி:

இவர்கள் வெளியே பலரை விமர்சனம் செய்யக் கூடியவராக தெரிந்தாலும் உள்ளுக்குள் அதிக அளவில் பாதுகாப்பை தேடுபவர்கள். சில ரகசியங்களை மற்றும் அவர்கள் மனதில் இருக்கக்கூடிய கவலைகளை யாரிடமும் பகிர மாட்டார்கள்.

துலாம்:

இவர்கள் வெளியே சம நிலையாக பேசக்கூடியவர்கள். ஆனால் உள்ளுக்குள் அதிக குழப்பம் கொண்டிருப்பவர்கள். உறவுகளில் ஒற்றுமையை எதிர்பார்ப்பார்கள். ஆனால் அவர்களுக்கான உண்மையை அடக்கிக் கொண்டு அமைதி காப்பார்கள். யாருக்கும் கஷ்டங்கள் வரக்கூடாது என்று அவர்களுடைய கஷ்டங்களை மறைத்து விடுவார்கள்.

2026: அட்சய திருதியை அன்று உருவாகும் 7 ராஜ யோகங்கள்.. உயரத்தை தொடும் 3 ராசிகள்

2026: அட்சய திருதியை அன்று உருவாகும் 7 ராஜ யோகங்கள்.. உயரத்தை தொடும் 3 ராசிகள்

விருச்சிகம்:

இவர்களிடம் சொல்ல கூடிய ரகசியம் இவர்களை கடந்து யாரிடமும் செல்லாது. வெளியில் பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் உள்ளுக்குள் மிகவும் தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள். பழி வாங்கக்கூடிய எண்ணம் எப்பொழுதும் இவர்களிடம் இருக்கும். காதலை அவ்வளவு சீக்கிரமாக வெளிப்படுத்த மாட்டார்கள்.

தனுசு:

வெளியே சுதந்திரமாக இருக்க விரும்புபவர்கள். ஆனால் உள்ளுக்குள் ஒருவரை சார்ந்து இருக்க வேண்டும் என்று நாடுபவர். அதிகமாக சிரித்தாலும் உள்ளுக்குள் அதிக வலியை வைத்துக் கொண்டிருப்பவர்கள்.

மகரம்:

வெளியே இவர்கள் பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் உள்ளுக்குள் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் கடமை உணர்ச்சி அதிகம். ஆனால் அன்புக்கு அதிகம் ஏங்குபவர். செய்யக்கூடிய வேலைகளை பெரும்பாலும் ரகசியமாகவே வைத்திருப்பார்.

கும்பம்:

வெளியே சகஜமாக பழகக் கூடியவராக இருந்தாலும் உள்ள தனிமை விரும்பியாக இருப்பார். எதையும் புதிதாக யோசித்து செயல்பட கூடியவர்கள். ஆனால் அவர்களுடைய உணர்வுகளை அவ்வளவு சீக்கிரமாக வெளிப்படுத்த மாட்டார்கள். யாராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியாத நபராக இருப்பார்.

மீனம்:

இவர்களுக்கு நிறைய கனவுகள் இருக்கும். ஆனால் எதையும் ஆழ்ந்து சிந்திக்க கூடியவராக இருப்பார். எல்லோருக்கும் உதவக்கூடிய குணம் இருக்கும். ஆனால் உதவி கேட்க தயங்குவார்கள். காதல் மற்றும் ஆன்மீகத்தில் நிறைய ரகசியங்களை சேர்த்து வைத்திருப்பார்கள்.    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US