வீட்டு வாசலில் எலுமிச்சை பழம் கட்டுவது ஏன் ?
வீட்டு வாசலில் எலுமிச்சை பழம் கட்டினால் கிடைக்கும் பயன்கள் வீட்டு வாசலில் எலுமிச்சை பழத்தை பலர் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். அது ஏன் என தெரியுமா?
எலுமிச்சை என்பது மலை உச்சியிலும் வளரக் கூடியது. மேலும் பல நன்மைகளைக் கொண்டுள்ளது எலுமிச்சை என்பது பலரும் அறிந்ததே.
வீட்டு வாசலில் எலுமிச்சை பழத்தை தொங்கவிடுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பார்ப்போம்.
எலுமிச்சையில் இருக்கக் கூடிய சில சக்திகள் நம்மிடம் இருக்கும் எதிர்மறை எண்ணங்களை விரட்டி அடிக்கக் கூடிய சக்தி படைத்தவை. எலுமிச்சையை சாப்பிடும்போது பித்தத்தை போக்கும்.
தேள் கடிக்கும் அற்புதமான மருந்து எலுமிச்சை. கோடைக்காலத்திலும் இது மிகவும் பயன் தரக் கூடியது. மேலும் எதிர்ப்புகளை சமாளிக்க மனிதர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது எலுமிச்சை.
எலுமிச்சை விதைகள் செல்வத்தை இழுக்கக் கூடியவை. எலுமிச்சையை கோயிலில் வைத்து சாமி கும்பிட்டுவிட்டு அதை பயணிக்கும்போது கொண்டு செல்லலாம்.
சக்தியை வாங்கி வைக்கும் ஆற்றல் கொண்டது எலுமிச்சை.
திருஷ்டியைப் போக்கக் கூடியது. பொறாமைப் பார்வையைப் போக்கக் கூடியது.
எலுமிச்சை பழத்தை குங்குமத்தில் தடவி சுற்றிப் போடுவதைக் கூட நாம் பார்த்திருப்போம்.
உடம்பில் இருக்கக் கூடிய சிக்கல்கள் போகும். கெட்ட அதிர்வுகளைக் கூட சரி
செய்யக் கூடியவை எலுமிச்சை. எலுமிச்சையை வீட்டில் முன்னால் கட்டும்போது கண் திருஷ்டி கழியும். திருஷ்டி என்றால் கண் பார்வை என அர்த்தம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |