இந்த ஒரு பொருள் கட்டாயம் பூஜை அறையில் இருக்க வேண்டும்
கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பார்கள்.அதே போல் உண்மையான பக்திக்கு சாஸ்திரம் கடமைகள் தேவை இல்லை என்றாலும் அதை நாம் பின் பற்றி செய்ய அதுவே நம்முடைய வாழ்க்கையில் ஒரு சிறு சிறு மாற்றம் உண்டாக்கும்.அப்படியாக நாம் கோயிலுக்கு செல்லும் பொழுதும் இல்லை வீட்டில் பூஜை செய்யும் பொழுதும் நாம் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான ஆன்மீக குறிப்புகள் பற்றி பார்ப்போம்.
1.கோவில் பிரகாரத்திற்குள் செல்ல நான்கு வழிகள் இருந்தாலும்,பிரதான வழியாக மட்டுமே நாம் செல்ல வேண்டும்.தூரம் குறைவு கூட்டம் அதிகம் உள்ளது என்று எந்த காரணம் கொண்டும் நாம் பிற வாசல் வழியாக செல்ல கூடாது.அவ்வாறு செல்வது நமக்கு அந்த அளவு நன்மை தராது.
2.பிற இடங்கள் காட்டிலும் கோயிலுக்கு முன் யாசகம் கேட்கும் மனிதர்கள் அதிகம் இருப்பார்கள்.அவ்வாறு கேட்பவர்களுக்கு நம்மால் முடிந்த உதவி செய்வது நமக்கு மன அமைதி தருவதோடு புண்ணியம் சேர்க்கும்.
3.நாம் தினமும் வீட்டில் விளக்கு ஏற்றும் நேரத்தில் ஒரு முறையாவது குலதெய்வத்தின் நாமத்தை நாம் சொல்ல வேண்டும்.அவ்வாறு செய்யும் பொழுது நம்மை பல ஆபத்துகளில் இருந்து காப்பாற்றி நன்மை உண்டாகும்.
4.மேலும் நம்முடைய வீட்டில் மிக முக்கியமாக இருக்க வேண்டிய பொருட்களில் கடவுளின் தீர்த்தம் அவசியம் இடம் பெற வேண்டும்.கங்கா தீர்த்தமாக இருக்கலாம், ராமேஸ்வர தீர்த்தமாக இருக்கலாம், திருச்செந்தூர் கடலின் தீர்த்தமாக இருக்கலாம்.
இவ்வாறு ஏதேனும் தீர்த்தம் நம்முடைய வீட்டில இருக்கும் பொழுது திருஷ்டி எதிர்மறை தீய சக்திகளை தடுக்கிறது.வீட்டில் கெட்ட அதிர்வுகளை உணரும் வேளையில் தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளிப்பது நல்ல மாற்றத்தை உண்டாக்கும்.
5.பெரும்பாலான வீடுகளில் குழந்தைகள் திருமணம் தாமதம் ஆகுவதை நாம் பார்த்து இருப்போம்.அவரது சுப நிகழ்ச்சிகளுக்கு தடங்கல் சந்திக்கும் குடும்பங்கள் குலதெய்வத்திற்கு மாங்கல்யம் வாங்கி சாத்துவதாக பிரார்த்தனை வைத்துக் கொண்டால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு சீக்கிரம் திருமணம் நடக்கும். சுபகாரிய தடை விலகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |