எந்த ராசிக்காரர்கள் எத்தனை முக ருத்ராட்சம் அணிய வேண்டும் ? முழு விவரங்கள் இதோ

By Sakthi Raj Jun 09, 2026 02:00 PM GMT
Report

சிவ வழிபாடுகளில் ருத்ராட்சம் அணிந்து வழிபாடு செய்வது என்பது மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. அப்படியாக, ருத்ராட்சம் அணிந்த பிறகும் நாம் ஒரு சில விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அதை பற்றி பார்ப்போம்.

ருத்ராட்சம் என்பது சிவபெருமானுடைய ஆனந்த கண்ணீரில் இருந்து உருவானது என்று கருதப்படுகிறது. ஆதலால் நாம் ருத்திராட்சத்தை அணியும் பொழுது சிவபெருமானுடைய பரிபூரண அருள் கிடைத்து நம்முடைய வாழ்க்கையில் மோட்சம் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். கழுத்தில் நாம் ருத்திராட்சம் அணியும் பொழுது எந்த கட்டுப்பாடு இல்லை.

ஆனால் மாலையாக ருத்ராட்சம் அணிகின்ற பொழுது அதற்கு சில கட்டுப்பாடுகள் இருக்கிறது. அந்த நேரங்களில் அசைவம் எடுத்துக் கொள்ளக் கூடாது, தீட்டு காலங்களில் மற்றும் இல்லற வாழ்க்கையின் பொழுது அதை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

ருத்ராட்சம் அணியும் பொழுது நம்முடைய உடலில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் எல்லாம் விலகி நேர்மறை ஆற்றலை நோக்கி பயணிக்க கூடிய சக்தியை இவை நமக்கு கொடுக்கிறது. அந்த வகையில் மேஷம் மற்றும் விருச்சிக ராசியினர் மூன்று முக ருத்ராட்சம் அணியலாம். அதே போல், ரிஷபம் மற்றும் துலாம் ராசியினர் ஆறுமுக ருத்ராட்சம் அணியலாம்.

எந்த ராசிக்காரர்கள் எத்தனை முக ருத்ராட்சம் அணிய வேண்டும் ? முழு விவரங்கள் இதோ | How Many Rudraksha One Must Wear According Zodiac

பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர செய்யவேண்டிய எளிய சக்தி வாய்ந்த பரிகாரம்

பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர செய்யவேண்டிய எளிய சக்தி வாய்ந்த பரிகாரம்

மிதுனம் மற்றும் கன்னி ராசியினர் நான்கு முக ருத்ராட்சம் அணியலாம். கடக ராசியினர் இரண்டு முக ருத்ராட்சம் அணியலாம். அதே போல், சிலர் ருத்ராட்சம் அணிந்த பிறகு நமக்கு கஷ்டங்கள் துன்பங்கள் வருகிறது என்று சொல்கிறார்கள்.

ஆனால், உண்மையில் ருத்ராட்சம் அணிந்த நொடியில் நம்முடைய கர்ம வினைகள் படிப்படியாக குறைந்து உங்களுடைய பிறப்பின் நோக்கத்தையும் ஆன்மீக பாதையில் உங்களை கூட்டிச் செல்லக் கூடியதாக அமைகிறது, இருப்பினும் அதை முழுமையாக ஒருவர் அணிந்து கொள்ளாமல் பாதையில் கழட்டி வைப்பது என்பது மோட்சம் அடைக்க கூடிய பாதையில் இருந்து அவர்கள் பாதியில் விலகக் கூடியதாகும்.

ஆக, ருத்ராட்சம் அணிந்த பிறகு துன்பங்கள் வருகிறது என்றால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். அதை முழுமையாக அனுபவியுங்கள். இறுதியில் கிடைக்கக்கூடிய ஆனந்தம் மற்றும் அதிர்ஷ்டம் அளவில்லாத இருக்கும். ஆக, ருத்ராட்சம் அணியும்போது இன்னும் என்னென்ன விஷயங்கள் நாம் கடைபிடிக்க வேண்டும் என்பதை இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US