தீர்க்க சுமங்கலி பவ என்றால் என்ன?
நாம் அனைவரும் பெரியவர்கள் பெண்களை வாழ்த்தும் பொழுது தீர்க்க சுமங்கலி பவ சொல்லி ஆசிர்வாதம் செய்து பார்த்து இருப்போம்.
அப்படியாக நம்மில் பல பேருக்கு தீர்க்க சுமங்கலி பவ என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தம் தெரியாமல் அந்த வார்த்தை பயன் படுத்து ஆசி வழங்கி இருப்போம்.
இப்பொழுது அந்த தீர்க்க சுமங்கலி பவ என்பதின் அர்த்தம் என்ன என்பதை பற்றி பார்ப்போம். ஒருவரை தீர்க்க சுமங்கலி பவஎன்று சொல்லி ஆசி வழங்குவதின் அர்த்தம் என்னவென்றால் மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம் அதாவது பெண் ஆனவள் கணவனிடம் திருமணத்தில் ஒன்று, 60 வயது ஷஷ்டியப்த பூர்த்தியில் ஒன்று, 70 வயது பீமரத சாந்தியில் ஒன்று, 80 வயது சதாபிஷேகத்தில் ஒன்று, 96 வயது கனகாபிஷேகத்தில் ஒன்று.
இந்த 5 மாங்கல்யங்களை பெரும் பாக்கியம் எல்லா பெண்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே இந்த தீர்க்க சுமங்கலி பவ என்ற வார்த்தையின் அர்த்தமாகும்.
அதாவது பெண்கள் தங்களுடைய மாங்கல்யத்தை தான் மிக பெரிதாக கருதுவார்கள்.
அப்படியாக பெண்களுக்கு பிற செல்வத்தை காட்டிலும் தங்களுடைய கணவனிடம் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து 96 வயது வரைக்கும் கணவனிடம் ஆசி பெறுவதே அவர்கள் பிறவி பயனாக கருதுவர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |