துன்பம் நீங்க மலையில் இருக்கும் இந்த முருகனை ஒருமுறை தரிசித்து வருவோம்
முருகன் என்றாலே துன்பங்கள் தீர்ப்பவர்.கலியுக வரதன் என்று நாம் போற்றப்படும் முருகன் பக்தர்கள் குரலுக்கு ஓடி வருவார்.அப்படியாக மலை உச்சியில் இருந்து ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகில் அமைந்துள்ள ஒரு சிறப்பு வாய்ந்த முருகன் கோவிலாகும்.
பவளமலை முருகன் கோவில், ஒரு சிறந்த சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. பவளமலையில் அழகிய மலைப்பாங்குகள், அமைதியான சூழல், சுத்தமான காற்று பார்வையாளர்களை கவர்கின்றன.
அதாவது பக்தர்களுக்கு ஏற்படும் திருமண தடை, குழந்தை பேறு, தொழிலில் வெற்றி பெற பக்தர்கள் அர்ச்சனை செய்கின்றனர். மேலும் இங்குள்ள பவளமலை முருகனை தரிசித்தால் தீராத நோய்கள் தீரும், கஷ்டங்கள் தீரும் மற்றும் விருப்பங்கள் நிறைவேறும் என நம்பப்படுகிறது.
பாவ விமோசனம், ஜெப சித்தி, ஆன்மீக உயர்வு பெறவும் பக்தர்கள் இங்கு வருகின்றனர். பவளமலை முருகனை காண படியேறி சென்றால் பக்தர்களின் எண்ணங்களில் குடிகொண்டிருந்த துன்பங்களும், துயரங்களும் காணாமல் போகும் என்பதே பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
நாமும் வாழ்நாளில் மலை மீது அழகைய் வீற்றி இருக்கும் முருகனை தரிசித்து அவரின் அருள் பெறுவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |