கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றும் அணையா தீபம் வழிபாடு
உலகத்தில் பிறந்த அனைத்து உயிரினத்திற்கும் கெட்ட காலம் வந்திருக்கும்.அது வாழ்க்கையின் ஒரு பங்கு நாம் அதை கண்டிப்பாக கடந்து ஆக வேண்டும்.அப்படியாக நம்மை இந்த கெட்ட நேரம் சூழும் பொழுது நம்முடைய எண்ணமும் மனமும் அமைதி ஆகி விடும்.
கண் கட்டி காட்டில் விட்டது போல் இருப்போம்.அந்த நேரத்தில் நாம் மனம் தளராமல் இறைவனை சரண் அடைந்து வணங்க வேண்டும்.அந்த வகையில் நம்முடைய வாழ்வில் நேரம் சரி இல்லாத பொழுது செய்ய வேண்டிய வழிபாட்டை பார்க்கலாம்.
ஒருவருக்கு கெட்ட நேரம் என்று சொல்வதை விட அது அவர்களின் கர்ம வினைகளை குறைக்கும் காலம் என்றே சொல்லலாம்.நிச்சயமாக கெட்ட நேரத்தை கடந்தவர்கள் வாழ்க்கையின் மிக பெரிய பாடத்தை கற்று வந்து இருப்பார்கள்.
அந்த நேரத்தில் மனம் சங்கடம் அடைந்தாலும் இறை வழிபாட்டை மேற்கொள்ள நிச்சயம் மனதில் தெம்பும் தைரியமும் பிறக்கும்.அந்த கால கட்டத்தில் எந்த ஆலயத்தில் 24 மணி நேரமும் அணையா தீபம் எரிந்து கொண்டு இருக்கிறதோ அந்த ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய கெட்ட காலமும் நல்ல காலமாக மாறும்.
அப்படி ஒரு வேளை ஆலயத்திற்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே அணையா தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்தாலும் நல்ல காலம் பிறப்பதற்குரிய வழி கிடைக்கும். இதோடு கால பைரவரை வழிபாடு செய்பவர்களுக்கு கெட்ட காலமும் நல்ல காலமாக மாறும் என்று நம்பப்படுகிறது.
கால பைரவரை எவர் ஒருவர் பற்றி கொள்கிறாரோ அவர்கள் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி தான்.மேலும் காலபைரவரை ராகு காலத்தில் வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு.
இதில் கால பைரவருக்கு புனுகு சாற்றி வழிபாடு செய்வது, செவ்வாழை வைத்து வழிபாடு செய்வது, சிவப்பு துணியை வாங்கி கொடுத்து செவ்வரளி மலர்களை வாங்கி கொடுத்து வழிபாடு செய்வது, சிவப்பு சந்தனத்தால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்வது, தயிர் அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்வது, திருமஞ்சனம் பொடியால் அபிஷேகம் செய்வது, சந்தன காப்பு செய்வது, இளநீர் அபிஷேகம் செய்வது, விபூதி அபிஷேகம் செய்வது என்று இவற்றில் எது நம்மால் முடியுமோ அதை ராகு காலத்தில் காலபைரவருக்கு செய்து தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்யும்பொழுது கால பைரவரின் அருளால் கெட்ட காலமும் நல்ல காலமாக மாறும்.
ஆக கெட்ட காலங்களில் அணையா தீபம் ஏற்றி வழிபாடு செய்கிறார்களோ அவர்களும்,கெட்ட களங்களில் கால பைரவரை எவர் பற்றி கொள்கிறாரோ அவர்களுக்கு நிச்சயம் நல்ல காலம் தான்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |