வாழ்க்கையில் துன்பமா?இந்த ஒரு விஷயத்தை செய்யுங்கள்
தீபம் என்பது ஒளி மட்டும் அல்ல அது நம் வாழ்வியல் ஓடு தொடர்பு உடையது.ஒருவர் வாழ்க்கையில் எவ்வளவு துன்பம் இருந்தாலும் அவர்கள் வீட்டில் தீபம் ஏற்ற அவர்களை வாழ்க்கையில் உள்ள இருள் நீங்கும் என்பது ஆன்மீகத்தின் உண்மை.
அப்படியாக ஒருவரின் ஜென்ம நட்சத்திரம் எந்த அளவிற்கு பிரகாசமாக இருக்கிறதோ, அந்த அளவே அவரது வாழ்க்கை பிரகாசமும் இருக்கும். எனவே, தங்களது ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் ஒரு தீபமாவது ஏற்றி இறைவனை வழிபட வேண்டும்.
இதனால் அவ்ரகள் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய திருஷ்டி இருந்தாலும் நிவர்த்தியாகி அவர்களது நட்சத்திரம் பிரகாசமாகி வாழ்க்கையும் பிரகாசமாக அமையும்.வேகமாக ஓடும் காலத்தில் பலரும் பெண்களும் வேலைக்கு செல்கின்றனர்.அவர்களால் தீபம் ஏற்ற முடிவது இல்லை.
இருந்தாலும் அவர்கள் எப்பொழுது முடிகின்றதோ அப்பொழுது காலையிலும் மாலையிலும் தீபம் ஏற்ற வீடுகளில் ஏற்படுகின்ற இருளை போக்குவதோடு மட்டுமல்லாமல் இடர்பாடுகளை தருகின்ற தீவினைகளையும், தீயசக்திகளையும் பஸ்மம் ஆகிவிடும்.
மேலும் நாம் ஆலயங்களில், இல்லங்களில், அலுவலகங்களில் தீபங்களை ஏற்றி ஒளிமயமான வாழ்க்கையையும், பலவித திருஷ்டி தோஷங்களின் நிவர்த்திகளையும் பெறலாம்.
ஒரு வீட்டில் எந்த அளவில் அதிக எண்ணிக்கையிலான தீபங்கள், எவ்வளவு நேரம் ஏற்றி ஒளிர செய்யப்படுகிறதோ அந்த அளவிற்கு திருஷ்டிகள் விலகி நன்மைகள் உண்டாகும்.
தீப ஜோதி சுடர்கள் எத்தகைய திருஷ்டி தோஷ கதிர்களையும் இழுத்து பஸ்மம் செய்கிறது. தீபங்களின் சுடர்களை உற்றுநோக்கி குறைந்தது ஒரு நாளைக்கு 5 நிமிடங்களாவது தொடர்ந்து தரிசிக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதனால் நம்மில் ஏற்பட்டுள்ள பலவித திருஷ்டி தோஷங்கள் கழிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் மனதின் நல்ல எண்ணம் தோன்றும்.
மேலும் மனதின் புத்திகூர்மை அதிகரிக்கிறது. எத்தகைய திருஷ்டி தோஷங்களுக்கும் சரியான, முறையான பலமான பரிகாரம் தீப ஜோதி வழிபாடுதான்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |