வருமான தடை நீங்க நம் வீட்டில் செய்ய வேண்டிய பரிகாரம்

By Sakthi Raj Sep 15, 2024 01:30 PM GMT
Report

உலகத்தில் மனிதனாக பிறந்த அனைவர்க்கும் பணம் என்பது மிகவும் தேவையான ஒன்று.அப்படியாக அந்த பணம் சம்பாதிக்க மட்டுமே மனிதன் ஓடி அலைந்து குடும்பம் பிரிந்து வாழ்ந்து கொண்டு இருக்கின்றான்.அப்படியான பணம் பற்றா குறையாகும் பொழுது அவன் மனம் வருந்தி இறைவனை வழிபாடு செய்வான்.

எத்தனை முறை பிறரிடம் கையேந்தி பணம் வாங்க முடியும்.அப்படியானவர்கள் மஹாலக்ஷ்மி தாயை வழிபட வாழ்க்கையில் உள்ள அனைத்து கஷ்டமும் விலகும். ஒரு வீட்டில் செல்வங்கள் தொடர்ந்து சேர்வதற்கு அங்கு மகாலட்சுமியின் அனுக்கிரகம் தேவை. வருமான தடை நீங்கி, பொருளாதாரம் உயர்ந்து, செல்வ மழை பொழிய செய்யக்கூடிய அற்புத எளிய பரிகாரம் தான் இது.

வருமான தடை நீங்க நம் வீட்டில் செய்ய வேண்டிய பரிகாரம் | How To Get Rid Of Money Problems

காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழும் நபர்களுக்கு இயல்பாகவே மகாலட்சுமியின் அனுக்கிரகம் கிடைக்கிறது. இவர்கள் சாதாரணமாக விளக்கேற்றி பூஜை செய்து வந்தால் சகல சௌபாக்கியங்களும் நாளடைவில் அடைந்து விடுவார்கள். ஆனால் பிரம்ம முகூர்த்தத்தில் எழ முடியாதவர்கள் சூரிய உதயத்தின் பொழுதாவது எழ வேண்டும்.

சூரிய உதயமாகும் முன்பு எழுவது தான் ஒரு மனிதனுக்கு சிறந்த நற்குணங்களையும், செல்வத்தையும் அளிக்கும்.

சூரிய உதயத்தின் பொழுது எழுந்து வாசல் கூட்டி பெருக்கி, பச்சரிசி மாவில் கோலம் போட்டுவிட்டு, பூஜை அறையில் ஒரு சிறிய பெட்டியில் உங்களிடம் இருக்கும் பணத்தில் கொஞ்சம் பணத்தை வைக்க வேண்டும்.

ஐயப்பன் வரலாறும் வழிபாடும் - பாகம் 2

ஐயப்பன் வரலாறும் வழிபாடும் - பாகம் 2


அதனுடன் மல்லிகைப்பூ சிறிதளவு, ஏலக்காய் 2, பச்சை கற்பூரம் கொஞ்சம், சந்தன கட்டி ஒன்று, வில்வ இலை ஆகியவற்றை வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு மகாலட்சுமி படம் வைத்து அதற்கு முன்பாக இரண்டு குத்து விளக்குகளில் ஐந்து முக திரி இட்டு நெய் ஊற்றி அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபத்தை எரிய விட வேண்டும். இவ்வாறு சூரிய உதயத்தின் பொழுது செய்து வருபவர்களுக்கு நாளடைவில் வருமான தடை நீங்கும் என்பது நியதி.

இதன் மூலம் உங்கள் பொருளாதாரம் பன்மடங்கு உயர்ந்து, செல்வ சேர்க்கை உண்டாகும். தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் பெண்கள் இதை வீட்டில் கடைபிடித்து வர வீட்டில் உள்ள பணக்கஷ்டம் விலகு குடும்பம் மகிழ்ச்சியில் திளைக்கும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.



+91 44 6634 5009
Direct
bakthi@ibctamil.com
Email US