துன்ப காலத்தில் என்ன செய்யவேண்டும்? கிருஷ்ணர் சொல்லும் விஷயம் இது தான்
இந்த உலகம் நிலையற்றது என்றாலும் மனிதர்களாக பிறந்த பலரின் மனதிலும் இருக்கக்கூடிய ஒரு விஷயம் பயம். அதாவது அடுத்த நொடி என்ன ஆகும்? நாளைய பொழுது எவ்வாறு அமையும்? என்று அதிகப்படியான பயம் சூழ்ந்து விடுகிறது.
உண்மையில் இந்த பிரபஞ்சம் அதனுடைய வேலையை எவ்வாறு செய்கின்றது என்று நாம் புரிந்து கொண்டால் பயம் நமக்கு வராது. அதாவது இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிர்களையும் இந்த பிரபஞ்சம் கண்காணித்துக் கொண்டிருக்கிறது. அனைத்து உயிர்களுக்கும் இந்த பிரபஞ்சம் பொறுப்பேற்க்கிறது.
ஆக நமக்கு ஒரு நல்ல விஷயம் நடக்கிறது என்றாலும் அதற்கும் இந்த பிரபஞ்சம் தான் காரணம், அதுவே நமக்கு மனம் வருந்தும்படியான விஷயம் நடக்கிறது என்றாலும் அதையும் பிரபஞ்சம் பார்த்து கொண்டு தான் இருக்கிறது.
ஆக இன்பங்கள் துன்பங்கள் வருவதை நாமும் தடுக்க முடியாது, பிரபஞ்சமும் தடுக்க முடியாது என்றாலும்வந்த துன்பத்தை தைரியமாக கடந்து செல்வதற்கான சக்தியையும் அதில் இருந்து மீட்டு வெளியே வருவதற்கான மனிதர்களின் துணையையும் இந்த பிரபஞ்சம் நமக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறது.
இங்கு யாரும் எவரும் தனித்து விடப்படுவதில்லை. அவர்கள் வாழ்வதற்கான காரணம் ஒவ்வொரு நாளும் இருந்து கொண்டிருக்கிறது. அவர்களுக்கான கடமையை அவர்கள் செய்வதற்கான மீதம் இருந்து கொண்டிருக்கிறது.
அவர்களின் கடமையை முடிப்பதற்காக இந்த பிரபஞ்சம் அவர்களுடன் சேர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. அதனால் தான் கிருஷ்ண பகவான்சொல்கிறார் எவர் ஒருவர் நான் அவர்களுடன் பயணம் செய்கிறேன் என்று தீர்க்கமாக நம்புகிறார்களோ அவர்கள் எதற்காகவும் எங்கும் உடைந்து போவது இல்லை என்று.
ஆக, நம்புவது தான் நம் வாழ்க்கையின் முதல் அங்குமாக இருக்கிறது. நம்பி விடுங்கள் இறைவன் என்னோடு இருக்கிறார், பிரபஞ்சம் எனக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று. நம்புங்கள் கட்டாயம் துன்ப காலங்களில் உங்களை விடுவிப்பதற்கு எங்கிருந்தோ எவர் வழியாகவோ இந்த பிரபஞ்சமும் உங்களுக்கு துணையை அனுப்பி கொண்டிருக்கும். இதை நாம் தெரிந்து கொண்டால் மனம் உடைந்து அழ தேவையில்லை. நொந்து நம் உடலை வருத்திக் கொள்ள தேவை இல்லை.
ஆக இந்த பிரபஞ்சம் நம்மை இருட்டின் கடைசி எல்லைக்கு கூட அழைத்து செல்லட்டும் நம்புங்கள் கிருஷ்ண பரமாத்மன் என்னுடன் இருக்கிறார். கடைசி நொடியிலும் அவர் வெளிச்சத்தை எனக்காக காட்டுவார் என்று. நம்பிக்கைதான் வாழ்க்கை. நம்பிக்கை மட்டும் தான் எல்லாமும்.
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







