2025 விநாயகர் சதுர்த்தி: இன்று இந்த 5 பொருட்களை விநாயகருக்கு படைக்க தவறாதீர்கள்
ஒவ்வொரு மனிதனும் சந்திக்கக்கூடிய பயத்தை போக்கி வாழ்க்கையில் உள்ள தடைகளை அகற்றி நமக்கு அருள் புரிபவர் விநாயகப் பெருமான். இவர் அவதரித்த தினத்தை ஒவ்வொரு ஆண்டும் விநாயக சதுர்த்தியாக கொண்டாடுகின்றோம். இந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி அன்று கொண்டாடுகின்றோம்.
இன்றைய தினத்தில் விநாயக பெருமானை வழிபாடு செய்வதால் நம் வாழ்க்கையில் பல நன்மைகள் கிடைக்கிறது. அப்படியாக இன்று விநாயகர் வழிபாட்டின் பொழுது கட்டாயமாக நாம் படைத்து வழிபாடு செய்ய வேண்டிய ஐந்து பொருட்களை பற்றி பார்ப்போம்.
இன்று விநாயகர் பெருமாளுக்கு அவருக்கு பிடித்த பொருட்களை நாம் படைத்து வழிபாடு செய்யும் பொழுது அவருடைய பரிபூரண அருளை நாம் பெறலாம். அதில் மோதகம், கொழுக்கட்டை, அப்பம், லட்டு வாழைப்பழம் என 21 எண்ணிக்கையில் படைத்து வழிபாடு செய்வது இன்னும் சிறந்த பலனை பெற்றுக் கொடுக்கும்.
ஆனால் எல்லோராலும் இந்த 21 எண்ணிக்கையில் நெய்வேத்தியம் செய்து வழிபாடு செய்ய முடியாமல் போகலாம். அப்படியானவர்கள் இந்த ஐந்து பொருட்களை படைத்து வழிபாடு செய்யலாம்.
1. முதலில் விநாயகர் வழிபாட்டில் மிக முக்கியமாக அருகம்புல் இருக்கிறது. அதாவது அனலாசுரன் என்ற அசுரனை விநாயகப் பெருமான் வெற்றி பெற்ற பிறகு அவருடைய உடலில் உஷ்ணத்தை போக்கியது இந்த அருகம்புல் ஆகும்.
இதனால் விநாயகருக்கு அருகம்புல் மிகவும் விருப்பமானதாகும். இதை படைத்து வழிபாடு செய்யும் பொழுது நம்முடைய குடும்பத்தில் சூழ்ந்துள்ள எதிர்மறை சக்திகள் விலகி, மனதில் சூழ்ந்திருக்கும் இருள் விலகி வெற்றிகள் குவிகின்றது.
2. அதேபோல் வெள்ளை எருக்கம் பூவை மாலையாக கட்டி விநாயகருக்கு படைத்து வழிபாடு செய்வதும் தீய சக்திகளில் இருந்து நம்மை காக்கும். மேலும் இவை நம்முடைய பயத்தை போக்கி தைரியத்தை வழங்கக் கூடியதாக அமைகிறது.
3. அடுத்ததாக பொரி, கடலை ஆகியவை தூய்மையின் வெளிப்பாடாக கருதப்படுகிறது. இதை நாம் படைத்து வழிபாடு செய்யும் பொழுது நம் மனமும் வாழ்க்கையும் செம்மை அடைகிறது. மேலும் இவை அனைத்து பக்தர்களாலும் படைத்து வழிபாடு செய்யக்கூடிய எளிமையான நெய்வேத்தியமாகும்.
4. எந்த ஒரு பூஜையிலும் வாழைப்பழம் முக்கிய பங்கு வகிக்கும். காரணம் வாழைப்பழத்தில் உள்ள விதையை நம் மண்ணில் தூக்கி எறிந்தால் அது மீண்டும் முளைக்காது. அதனால் தான் பிறவா வரம் வேண்டும் என்றும் முக்தி பெற வேண்டும் என்றும் நம் வாழைப்பழம் படைத்து வழிபாடு செய்கின்றோம்.
5. பூஜையின் பொழுது வெற்றிலை பாக்கும் ஒரு முக்கிய பங்கு கொண்டது. இந்த வெற்றிலை பாக்கு ஒருவரை முறையாக அழைப்பதற்கு பயன்படுத்தக்கூடிய ஒரு பொருளாகும். மேலும் வெற்றிலை பாக்கு மகாலட்சுமி அம்சமாக போற்றப்படுகிறது. இதை வைத்து நம் வழிபாடு செய்யும் பொழுது குடும்பத்தில் மங்களகரமான காரியம் நடக்கிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







