இன்றைய ராசி பலன்(27-08-2025)

Report

மேஷம்:

இன்று குடும்பங்களில் மகிழ்ச்சியான நேரத்தை செலவு செய்வீர்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கணவன் மனைவி இடையே சில வாக்குவாதம் உண்டாக்கலாம். விட்டுக் கொடுத்துச் செல்வது நன்மை அளிக்கும்.

ரிஷபம்:

இன்று நண்பர்களுடன் முழு நேரத்தையும் செலவழித்து மனம் மகிழ்ச்சியை பெறுவீர்கள். கோவில் வழிபாடுகளில் ஈடுபாடு செலுத்துவீர்கள். வேலை தொடர்பாக வெளியூர் பயணம் செல்வதை ஒத்தி வைப்பது நல்லது.

மிதுனம்:

நீண்ட நாட்களாக நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணிய காரியத்தை இன்று துணிச்சலாக செய்வீர்கள். மனதில் இனம் புறியாத சந்தோஷம் உருவாகும். உடல் உடல்நிலை தொடர்பாக மருத்துவரை சந்திப்பீர்கள்.

கடகம்:

உங்களுடைய ஆரோக்கியத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும். சிலருக்கு வீண் மருத்துவ செலவுகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. பிள்ளைகள் தொடர்பாக குடும்பங்களில் சில வாக்குவாதங்களை சந்திக்கலாம்.

சிம்மம்:

இன்று வெளிநாடுகளில் இருந்து உங்களுக்கு சில முக்கியமான பொருட்கள் கைகளுக்கு வந்து சேரும். இறை வழிபாட்டில் உங்களை ஈடுபடுத்துவது உங்களுடைய வளர்ச்சிக்கு நன்மை அளிக்கும்.

கன்னி:

வேலைகளில் முன்னேற்றமடைய இன்று விநாயகர் வழிபாடை அவசியம் செய்யுங்கள். முடிந்த வரை இன்று பிறரிடம் வீண் போகும் கொள்வதை தவிர்க்க வேண்டும். பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெறுவீர்கள்.

இந்த 3 மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் தந்திரமானவர்களாம்

இந்த 3 மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் தந்திரமானவர்களாம்

துலாம்:

இன்று மனதில் தெளிவும் சந்தோஷமும் உண்டாகும். குடும்பத்துடன் ஆலய வழிபாடு மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் உங்களுக்கு நெருக்கமானவர்களால் சில நன்மைகள் நடக்கும். சந்தோஷமான நாள்.

விருச்சிகம்:

குடும்பத்தில் சில சுபகாரியங்கள் நடக்கலாம் . உங்கள் குடும்ப விஷயங்களை நீங்கள் மூன்றாம் நபரிடம் சொல்லாமல் இருப்பது நன்மை தரும். பிரிந்த சொந்தங்கள் மீண்டும் ஒன்று சேர்வார்கள்.

தனுசு:

உங்கள் மனதில் உள்ள பாரம் குறையும். இறைவழிபாட்டில் முழு மனதை செலுத்துவீர்கள். சிலருக்கு உடல் சோர்வு மதியம் மேல் உண்டாகலாம். கவனமாக இருந்து செயல்பட வேண்டிய நாள்.

மகரம்:

செலவுகளை தவிர்ப்பதற்காக சில முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தாய் தந்தையர் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். தங்கை உறவால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகி நன்மையை ஏற்படும்.

கும்பம்:

நண்பர்களுடன் தொலைதூர பயணம் மேற்கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். தேவையில்லாத உறவுகளால் சிக்கல்கள் உண்டாகும் . மிக கவனமாக செயல்பட்டு தங்களை பார்த்துக் கொள்ள வேண்டிய நாள்.

மீனம்:

இன்று உண்மை முகங்களை அறிந்து செயல்படக்கூடிய நாள். சிலர் தீர்க்கதரிசிகளின் வாக்குகளை பெறுவீர்கள். கடவுள் மீது நம்பிக்கையும் சிந்தனையும் அதிகரிக்கக்கூடும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US