கோவில் வழிபாடுகளை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைக்கலாமா?

By Sakthi Raj Jun 10, 2026 01:00 PM GMT
Report

இறைவழிபாடு என்பது நம்முடைய ஆன்மா மேன்மை அடையவும் இந்த மாயை உலகில் இருந்து நாம் விடுபட்டு வேறு எந்த உலகத்திற்கு சென்றாலும் நம்முடைய ஆன்மா துன்பப்பட்டாலும் அந்த நேரத்தில் இறைவனுடைய கருணையால் மீண்டு வருவதற்கான ஒரு ஆசிர்வாதத்தை பெற வேண்டும். அந்த அளவிற்கு இறைவனை சரண் அடைய வேண்டும்.

பொதுவாக, இறை வழிபாடு செய்வதை காட்டிலும் நம்முடைய கடமையை நாம் சரியாக செய்து விட்டாலே இறைவன் நம்மை தேடி வந்து நமக்கு அருள் புரிவார்.

அந்த வகையில் ஆன்மீக சொற்பொழிவாளர் விஜயகுமார் அவர்கள் முருகப்பெருமானை எவ்வாறு ஆத்மார்த்தமாக நாம் வழிபாடு செய்ய வேண்டும்? ஆன்மீக வாழ்க்கையில் என்னென்ன விஷயங்களை நாம் கடைபிடிக்க வேண்டும் என்று இந்த காணொளியில் சொல்லியிருக்கிறார்.

நீங்கள் துலாம் ராசியில் பிறந்தவர்களா? உங்கள் வாழ்க்கையின் கர்ம பலன் இதுதான்?

நீங்கள் துலாம் ராசியில் பிறந்தவர்களா? உங்கள் வாழ்க்கையின் கர்ம பலன் இதுதான்?

அதாவது இறைவழிபாடு செய்யும்பொழுது எந்த ஒரு பொருள் நோக்கமும் இல்லாமல் நாம் வழிபாடு செய்ய வேண்டும். அதேபோல் திருப்புகழை நாம் அர்த்தம் புரிந்து கொண்டு பாடுவது என்பது இன்னும் சிறந்த வாழ்க்கையை நமக்கு பெற்றுக் கொடுக்கும்.

அடியார்களுடன் இணைந்து நாம் பயணிப்பது என்பது நம்மை இறைவனிடம் சேர்க்க உதவக்கூடிய ஒரு வழியாக அமையும்.

கோவிலுக்கு செல்வது வெறும் சம்பிரதாய மட்டுமல்ல நம்முடைய முற்பிறவியின் பலனையும் இந்த பிறவியின் நோக்கத்தையும் அறிந்து கொள்வதற்கு சிந்தனையை தூண்டக்கூடியதாக இருக்கிறது என்றும் இறைவனுக்கும் நமக்கும் இடையிலான பக்தி மிகவும் ரகசியமானது என்றும் அதை நாம் முடிந்தவரை வெளியே சொல்வதை தவிர்த்து விட வேண்டும் என்றும் சிலர் அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார்கள்.

அதை குறைத்துக் கொண்டாலும் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். மேலும், இறை வழிபாட்டின் பொழுது நாம் என்ன விஷயங்களை கடைபிடிக்க வேண்டும் என்று இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம். 


ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US