வீட்டில் தீய சக்திகள் இருப்பதை எவ்வாறு அறிந்து கொள்வது?
உலகில் நிச்சயம் நல்லது இருந்தால் கெட்டது இருக்கும்.அந்த வகையில் நல்ல சக்திகள் இருந்தால் அதற்கு எதிராக தீய சக்திகளும் இருக்கும்.அப்படியாக திடீர் என்று நம்முடைய வீட்டில் தேவை இல்லாத சண்டைகள் பிரச்சனைகள் உருவாகும்.
அந்த பிரச்சனை எதனால் என்று அறிந்து கொள்ள முடியாது.மேலும் வீட்டின் சூழலில் ஏதோ மாற்றம் இருப்பதையும் நம்மால் உணரமுடியும்.ஆனால் அவை எதனால் நடக்கிறது என்று சரியாக புரிந்து கொள்ள முடியாது.
இவ்வாறு சூழல் மாறும் பொழுது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எதிரிகள் என்பது இயல்பான விஷயம் தான்.அந்த எதிரிகள் நாம் வீழ்ந்து விட வேண்டும் என்று சில முரண்பாடான காரியங்கள் செய்வது உண்டு.அதாவது ஏதேனும் நடக்கும் பிரச்சனைகளுக்கு தீர்ப்பு அவர்கள் பக்கம் சாதகமாக வேண்டும் என்று சிலர் செய்வினை வசியம் போன்ற செய்லகளில் ஈடுபடுவதை நம்மால் பார்க்கமுடியும்.
அப்படியாக ஒருவர் செய்வினையால் பாதிக்க பட்டு இருந்தால் அவர்கள் வீட்டில் அந்த அறிகுறியை காட்டி விடும்.அதை நாம் எவ்வாறு கண்டுபிடிக்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
இதற்கு முதலில் ஒரு மண்பானை எடுத்து கொண்டு அதில் துளசியை போட்டு வைக்க வேண்டும்.துளசியை போட்ட உடன் வாடி விட்டால் தீய சக்திகள் இருப்பதற்கான அறிகுறி.இலை வாட வில்லை என்றால் வீட்டில் ஆபத்துகள் எதுவும் இல்லை.
பிறகு ஒரு எலுமிச்சை பழம் மாலையை உங்கள் கைகளால் கோர்த்து அதை நீங்களே அருகில் இருக்கும் காளி அம்மன் கோயிலில் சாற்றி பூஜை செய்த பிறகு அதில் இருந்து ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து வீட்டில் ஏதேனும் ஓர் இடத்தில் வைக்க அந்த பழம் வாடி இருந்தால் தீய சக்திகள் எதுவும் இல்லை ஆனால் பழம் அழுகி இருந்தால் வீட்டில் ஏதேனும் எதிர்மறை ஆற்றல் இருக்கிறது என்பது அர்த்தம்.
மேலும் உங்களுக்கு செய்வினை செய்திருப்பதிலிருந்து விலக எலுமிச்சை பழத்தை எடுத்து உங்களின் குலதெய்வத்தை நினைத்து உங்கள் தலையை சுற்றி பின்புறமாக வீசிவிட வேண்டும். பிறகு குளத்தில் நீராடுங்கள்.
இவ்வாறு எதிர்மறை எண்ணங்கள் வீட்டில் அதிகம் தென்பட்டால் காளி தேவியை சரண் அடைந்து வழிபாடு செய்ய அம்பாள் நல்வழி காட்டுவாள்.இறைவழிபாட்டால் மாற்ற முடியாதது என்று எதுவும் இல்லை.மனதார நம்பி செய்தால் எல்லாம் சரியாகி விடும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |