மெய்சிலிர்க்க வைக்கும் சிவபெருமானின் பக்தி பாடல்கள்
நேற்றைய இரவு உலகம் எங்களிலும் உள்ள சிவ பக்தர்களால் மகாசிவராத்திரி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.பல்வேறு இடங்களில் மக்கள் கோயில்களில் சங்கமித்து இரவு முழுவதும் சிவ நாமங்கள் சொல்லியும்,பாடல்கள் பாடியும் வழிபாடு செய்து வந்தனர்.
பொதுவாக மாசியில் வரும் மகாசிவராத்திரி சிவபெருமானின் வழிபாட்டிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.அன்றைய இரவு நாம் வழிபாடு செய்தால் சிவபெருமானை மனதார உணர்வதோடு அவரின் பரிபூர்ண அருளை பெற முடியும் என்பது தவிர்க்க முடியாத நம்பிக்கை
.அப்படியாக நேற்று இரவு மகாசிவராத்திரி அடுத்து ஐபிசி பக்தியில் பல்வேறு சிறப்பு ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெற்றது.அதில் பிரபல பாடகர் ராமு மஹாராஜபுரம் அவர்கள் சிவனின் அற்புத பாடல்களை பாடி பக்தி பரவசத்தில் ஆழ்த்தினார்.அவர் பாடிய அற்புதமான பாடல்களை மெய்சிலிர்க்க கேட்டு மகிழ்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |