குருவுடன் எந்த கிரகம் சேர்ந்தால் விபரீத ராஜயோகம் உண்டாகும்
Report this article
ஜோதிடத்தில் குரு என்பது மிக முக்கியமான கிரகம் ஆகும்.அப்படியாக குருவுடன் எந்த கிரகம் சேர்ந்தால் நமக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
1.ஒருவருக்கு அரசாங்க பதவி கிடைக்கவேண்டும் என்றால் அவர்களுக்கு குருவுடன் சூரியன் சேர்ந்து இருக்கவேண்டும்.அவ்வாறு சேர்ந்து இருக்கும் பொழுது அவர்கள் நல்ல ஆளுமை தன்மையில் இருப்பார்கள்.மிக பெரிய வெற்றியும் சாதனையும் அவர்கள் அடைவார்கள்.
2.ஒருவருக்கு வற்றாத செல்வம் நிலைக்க அவர்கள் ஜாதகத்தில் குருவுடன் சந்திரன் சேர்ந்திருக்க வேண்டும்.அப்பொழுது பண ரீதியாக எந்த ஒரு பாதிப்பும் உண்டாகாது.மிக வசதியான வாழ்க்கையை வாழ்வார்கள்.மிக பெரிய அந்தஸ்து அவர்களுக்கு கிடைக்கும்.
3.சிலர் வீடுகளில் பார்த்து இருப்போம் எங்கு இருந்து அவர்களுக்கு பணம் வருகின்றது தெரியாது,ஆனால் அடிக்கடி அவரகள் வீட்டில் நிலம் வீடு வாகனம் என்று வாங்கி கொண்டு இருப்பார்கள்.காரணம் அவர்கள் ஜாதகத்தில் குருவுடன் செவ்வாய் இணைத்திருப்பர்.அவ்வாறு இணைத்து ஜாதகத்திற்கு தான் இவ்வாறான அதிர்ஷடம் நடைபெறும்.
4.ஒருவருக்கு செய்யும் காரியங்களில் வெற்றி மற்றும் தொழிலில் நல்ல மாற்றம் முன்னேற்றம் உருவாக குருவுடன் சுக்கிரன் இணைந்து இருப்பது நல்ல வாய்ப்புகள் உருவாக்கி கொடுக்கும்.இவர்களுக்கு தொழில் ரீதியாக தோல்வி உண்டாகாது.
5.ஒரு சில குடும்பங்களில் அடுத்து அடுத்து வழக்குகள் சந்திக்க நேரிடும்,அதற்கு குருவுடன் சனி இணைத்திருப்பதே காரணம் ஆகும்.இவர்களுக்கு கடுமையாகச் செயல் பட்டே எந்த வெற்றியையும் பெற முடியும்.
6.சிலருக்கு எங்கு இருந்து உதவி கிடைக்கும் என்று தெரியாது இருந்தாலும் தொடர்ந்து பிறருடைய உதவியால் அவர்ளுக்கு வாழ்க்கையில் பல மாற்றமும் வெற்றிகளும் கிடைக்கும்.இதற்க்கு குருவுடன் ராகு இணைந்திருந்தால் நடக்கும்.
7.குருவுடன் கேது சேர்ந்தால் வருமானம் சிறப்பாக இருக்கும்.வெளிநாடுகளுக்குச் சென்று பணம் சம்பாதிக்கும் யோங்கம் உண்டாகும்.வேறு மொழி பேசும் மனிதர்களால் பல பயனுள்ள நன்மைகள் ஏற்படும். செல்வ வசதிகள் நிறைந்த வாழ்க்கை அமையும்.
8.குருவுடன் புதன் சேர்ந்தால் தொழில், வியாபாரத்தில் பல நெருக்கடிகள் தோன்றும். எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது.வருமானத்தை விடச் செலவு அதிகமாக இருக்கும்.குடும்பத்தில் அடிக்கடி சண்டைகள் உருவாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |