தீராத பிரச்சனையை தீர்க்கும் வேல்மாறலில் வரும் இந்த 3 வரிகள்
இங்கு மனிதர்கள் சிலர் ஒரு விஷயத்தை செய்வதற்கு முன் அவர்கள் எதிர்காலத்தில் தங்களுக்கு கிடைக்கக்கூடிய பலன்களை தான் மனதில் வைத்து செய்கிறார்கள். அதாவது நான் இன்று இதை செய்தால் எனக்கு எதிர்காலத்தில் நினைத்த பலன்கள் கிடைக்குமா? அது கிடைத்தால் மட்டுமே நான் ஒரு விஷயத்தை செய்வேன் என்று அவர்கள் மிக தீர்க்கமாக இருந்து பலவற்றை அவர்கள் கடைப்பிடித்து வாழ்ந்து வருகிறார்கள்.
ஆனால் ஆன்மிக வழிபாடு, இறைவழிபாடு என்பது இவ்வாறு செயல்படக்கூடியது இல்லை. பலரும் இறைவனை நான் சரணடைந்தேன் இருந்தாலும் எனக்கு தீராத துன்பம் வருகிறது, இதற்குப் பிறகு நான் இறைவனிடம் வேண்டுதல் வைத்து பூஜை செய்து வழிபாடு செய்வது எதற்கு? என்று ஒரு கேள்விகளோடு பல சமயங்களில் நிற்பதையும் நான் பார்க்க முடிகிறது.
ஆக இங்கு இறை வழிபாடும் ஆன்மீக பாதையும் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இறைவன் ஒரு மனிதனை அவ்வாறே அவன் நிற்கின்ற இடத்தில் இருந்து இறைவன் ஏற்றுக் கொள்கிறான்.

ஆனால் அவனை அந்த இடத்தில் இருந்தே மிகத் தூய்மையான மனிதராக மாற்றவே அவனுக்கு பல துன்பங்களை சோதனையும் கொடுக்கின்றான். இந்த மனித பிறப்பு என்பது நொடியில் இறந்து போகக்கூடிய, மறைந்து போகக்கூடிய ஒரு பிறப்பாக இருக்கிறது. அதாவது எல்லாமே மாயை என்றுதான் நாம் சொல்ல வேண்டும்.
இந்த மாயையில் நமக்கும் மேல் ஒரு சக்தி இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் தவிர்க்கவே முடியாத ஒன்றாக இருக்கிறது. அதாவது பல லட்சம் உயிர்கள் பல கோடி உயிர்கள் இந்த பூமியில் ஜனனம் செய்து மரணிக்கவும் செய்கிறார்கள். அவ்வாறு மரணிக்கும் உயிர்கள் எங்கே செல்கிறது?
எதற்காக பிரிந்து சென்ற உயிரை நம்மால் மீண்டும் காண முடிவது இல்லை என்ற கேள்விக்கான விடை இல்லை. ஆக இந்த உலகத்தில் நாம் எதையும் சாதித்து விடலாம். ஆனால் பிரிந்து போன உயிரை நாம் மீண்டும் உடலுக்குள் கொண்டுவர முடியாது என்பதில் தான் இறைவனுடைய ஆட்டம் இருக்கிறது.
அதனால் ஒரு சக்தி கட்டாயம் நம்மை இயக்கி கொண்டிருக்கிறது. அவர்கள் நம்மை வழி நடத்துவதற்காக நம் ஆன்மாவை தூய்மைப்படுத்துவதற்காக அருள்புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்படியாக கலியுக வரதனாக போற்றப்படும் முருகப்பெருமான் இன்று பக்தர்களால் கொண்டாடப்பட்டு கொண்டிருப்பவர்.

காரணம் அவரை மனதார வழிபாடு செய்து ஒரு ஐந்து நிமிடம் அவரிடம் நாம் பிரார்த்தனை வைத்தாலே அந்த பிரார்த்தனைக்கான விடையை கொடுக்க கூடியவர். அந்த வகையில் அவருடைய பிரார்த்தனை எப்பொழுது இன்னும் சக்தி வாய்ந்ததாக மாறுகிறது என்றால் அவருடைய மந்திரங்களையும் பாடல்களையும் நாம் பாராயணம் செய்து வழிபாடு செய்யும் பொழுது தான்அது மிகவும் சக்தி வாய்ந்ததாக மாறுகிறது.
உதாரணமாக ஒருவர் எதிரிகள் தொல்லையால் மிகவும் துன்புற்று வருகிறார். அவர் தொடர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடி பிரார்த்தனை செய்ய எதிரிகள் வந்த வழி தெரியாமல் போன கதைகளும் இருக்கிறது. அப்படியாக முருகப்பெருமானுடைய வேல்மாறலும் மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த வேல் மாறலை தொடர்ந்து பாராயணம் செய்து கொண்டே இருக்க நம் உடலில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் விலகுகிறது.
உங்களை அறியாமல் உங்களை சுற்றி ஒரு மிகப்பெரிய ஒரு சக்தி கவசம் உருவாகிறது. உங்களை எதிர்காலத்தில் வரவிருக்கும் ஆபத்துகளில் இருந்தும் காப்பாத்த கூடிய ஒரு மிகப்பெரிய சக்தி கவசமாக அது மாறுகிறது. வேல் மாறலை தினமும் பாராயணம் செய்பவர்களுக்கு கட்டாயம் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை தவிர அவர்கள் வேறு எதுவும் சந்திக்க போவதில்லை.
மேலும், வேல்மாறல் என்பது மிகவும் ஒரு நீளமான ஒரு பாடல் தான். அந்த பெரிய பாடலை நினைவுகூர்ந்து அல்லது எல்லா இடங்களிலும் முழுமையான பாடலை அவர்கள் பாட முடியாது. அதனால் வேல்மாறல் இருக்கக்கூடிய இந்த மூன்று வரிகளை மட்டும் அவர்கள் மனதில் பதித்துக் கொண்டு அதை பாராயணம் செய்து கொண்டே இருந்தார்கள் என்றால் நிச்சயம் முருகப்பெருமானுடைய வழிகாட்டுதலும் அருளும் அவர்களுக்கு கிடைக்கும்.

வேல்மாறல்:
"திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை
விருத்தன் என துளத்தில் உறை
கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே"
வேல்மாறில் வரக்கூடிய இந்த மூன்று வரிகளை மட்டும் நீங்கள் மனதில் பதித்துக் கொண்டு தினமும் பாராயணம் செய்து கொண்டே இருந்தால் நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நினைத்ததை சாதிக்கக்கூடிய வலிமையை அந்த முருகப்பெருமான் கொடுப்பார்.
அதனால் எப்பொழுதும் கடவுளுடைய மந்திரங்களையும் கடவுளுடைய பிரார்த்தனையும் நாம் மிக எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மனிதர்களை தாண்டி மனிதர்களை இயக்கிக் கொண்டிருப்பவர் தான் கடவுள்.
அதாவது நமக்கும் மேல் ஒரு சக்தி இயங்கி கொண்டிருக்கிறது. அவை எதையும் மாற்றக்கூடிய வல்லமை படைத்தது என்பதை நாம் மனதில் வைத்துக்கொண்டு பிரார்த்தனை செய்ய வந்த துன்பம் விலகுவதோடு, நம் ஆன்மா தூய்மை அடைந்து நம்முடைய ஆன்மீக பயணமும் மிக அருமையாக மாறும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |