வீட்டில் கெட்ட சக்திகள் விலக 48 நாள் மூலிகை சாம்பிராணி போடுங்கள்
காலம் மாற பலரும் பழமையான ஒன்றை மறந்து வருகின்றனர்.அதில் ஒன்று சாம்பிராணி தூபம் போடுவது.சாம்பிராணி தூபம் மிகவும் சக்தி வாய்ந்ததாக ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.ஒருவர் வீட்டில் சாம்பிராணி தூபம் போட அவர்கள் வீட்டில் ஏற்பட்ட எப்பேர்ப்பட்ட பாதிப்பும் விலகும்.
மேலும் சித்தர்களும் இந்த சாம்பிராணி தூபம் போடுவதின் நன்மைகளை பற்றி சொல்லி இருக்கிறார்கள்.அதிலும் சித்தர்கள் அருளிய மூலிகை சாம்பிராணி வீட்டில் போடுவதால் வீட்டில் அலையும் கெட்ட சக்திகளை அகற்றி விடும்.
நாம் இப்பொழுது சித்தர்கள் அருளிய ஏழு வகை மூலிகை சாம்பிராணியை வீட்டில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றி பார்ப்போம்.
இந்த ஏழு வகையான மூலிகை சாம்பிராணி செய்வதற்கு வெண்கடுகு, நாய் கடுகு, மருதாணி விதை, அருகம்புல் பொடி, வில்வ பொடி, வேம்பு பொடி, குங்கிலியம். எடுத்து கொள்ள வேண்டும்.பின்பு அதை எல்லாம் பொடியாக செய்து காற்று நுழையாத பாத்திரத்தில் போட வேண்டும்.
பிறகு பொடி செய்த மூலிகை சாம்பிராணியை வாரத்தில் மூன்று நாள் காலை மாலை வீட்டில் தூபம் போட வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து 48 நாட்கள் செய்து வர வீட்டில் ஏற்பட்ட காரிய தடை,வீண் சண்டை,பிரிவு,போன்றவை விலகிவிடும்.
மேலும் 48 நாட்கள் பிறகும் நாம் வீட்டில் தூபம் போடுவதை நிறுத்த கூடாது.அதுவும் பிறந்த குழந்தைகள் வீட்டில் இருந்தால் முன் வாசல் பின் வாசலில் கட்டாயம் தூபம் காண்பிக்க வேண்டும்.அவ்வாறு செய்யும் பொழுது வீட்டில் நேற்மறை ஆற்றல் பெருகி தீய சக்திகள் அண்டாது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |