இன்று 04.09.2025 வாமன ஜெயந்தி உணர்த்தும் உண்மைகள் என்ன தெரியுமா?
மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் வாமன அவதாரம் மிக சிறப்புடைய அவதாரமாக கூறப்படுகிறது. அதுமட்டும் அல்லாமல் கிருஷ்ண அவதாரங்களை போல வாமன அவதாரமும் மக்களிடையே மிகவும் பிரபலம் வாய்ந்தது. தசாவதாரத்தில் இந்த அவதாரம் தான் விஷ்ணு பகவானின் முதல் மனித அவதாரம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த அவதாரத்தில் மகாவிஷ்ணு யாரையும் சம்ஹாரம் செய்யவில்லை. அப்படியாக வாமனர் பிறந்த நாளான ஆவணி மாத துவாதசியில் வரும் திருவோண நட்சத்திர நாள் அன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த வாமன அவதாரம் நமக்கு சில முக்கியமான உணர்த்துகிறது. அதை பற்றி பார்ப்போம்.
1.இந்த உலகத்தில் நாம் எந்த குலத்தில் வேண்டுமானாலும் பிறந்து இருக்கலாம். ஆனால் தர்மத்தையும் நீதியையும் நியாயத்தையும் கடைப்பிடித்து ஒருவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றி வாழ்ந்து வரும் பொழுது நாம் மிக உயர்ந்த நிலையை அடையலாம் என்பதை அசுரர் குலத்தில் பிறந்த மகாபலிக்கு கிடைத்த அருளை கொண்டு நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
2. மேலும் ஒரு மனிதன் செய்யும் நல்ல காரியங்களை ஒருவர் தடுக்க முயற்சித்தாலும் அவர்களுக்கு சுக்ராச்சாரியரின் கண் குருடான சம்பவம் உணர்த்துகிறது.
3. மேலும் மகாபலியை காக்கும் கடமையை பகவான் விஷ்ணு ஏற்றுக் கொண்டதன் மூலம் ஒருவன் சரணாகதி அடைகிறார் என்றால் அவரை பகவான் நிச்சயம் காப்பாற்றுவார் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







