நியூமராலஜி: உங்க மொபைல் எண் இதுவா? அப்போ அடிக்கடி உங்களுக்கு பிரச்சனை வருமாம்

By Sakthi Raj Sep 04, 2025 04:07 AM GMT
Report

ஜோதிடத்தில் நியூமராலஜியும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இதை எண் கணிதம் என்றும் சொல்வார்கள். அந்த வகையில் நாம் அனைவரிடமும் இருக்கக்கூடிய மொபைல் எண்கள் வைத்தும் நாம் நியூமராலஜி பார்க்கலாம். மேலும், அவை நம் வாழ்க்கையுடன் தொடர்புடையது.

 அதனால் தான் பெரும்பாலானோர் மொபைல் எண்களும் நியூமராலஜி பார்த்து வாங்குவதை நாம் கவனிக்க முடியும். அந்த வகையில் நம்முடைய மொபைல் எண் இந்த இரண்டு எண்களில் இருந்தால் அவை பிரச்சனையை தருவதாக சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.

அதாவது நியூமராலஜி படி குறிப்பிட்ட இந்த இரண்டு எண்கள் நம்மை நீதிமன்றம் வரை கூட அழைத்து செல்லலாம் என்று சொல்கிறார்கள். அந்த எண்களில் மொபைல் வைத்திருப்பவர்களுக்கு தொழில் வாழ்க்கையில் அதிகப்படியான பிரச்சனைகள் வரலாம் என்கிறார்கள்.

நியூமராலஜி: உங்க மொபைல் எண் இதுவா? அப்போ அடிக்கடி உங்களுக்கு பிரச்சனை வருமாம் | Mobile Number Numerology Prediction In Tamil

அதாவது உங்களுடைய மொபைல் எண்ணில் மொத்த கூட்டுத்தொகை 4 அல்லது 8 ஆக இருந்தால் அவை ஒரு மிகப்பெரிய போராட்டத்திற்கு உரிய எண்ணாக பார்க்கப்படுகிறது. இந்த எண்ணானது உங்களுடைய தொழில் வாழ்க்கையில் மட்டுமல்லாமல் சொந்த வாழ்க்கையிலும் அதிகப்படியான பிரச்சனைகளை கொடுப்பதாக சொல்கிறார்கள்.

காரணம் 4 என்பது ராகுவின் எண்ணாகும் 8 என்பது சனிக்குரிய எண்ணாகும். இந்த இரண்டில் உங்களுடைய மொபைல் எண்ணின் கூட்டுத்தொகை ஏதேனும் ஒன்று என்றால் அவை நமக்கு அதிகப்படியான பிரச்சனைகளை நமக்கு அவை ஏற்படுத்திக் கொடுத்து விடும் என்கிறார்கள்.

ஒரே நாளில் சஞ்சரிக்கும் மூன்று கிரகங்கள்- இந்த 3 ராசிகளுக்கும் பண மழை தான்

ஒரே நாளில் சஞ்சரிக்கும் மூன்று கிரகங்கள்- இந்த 3 ராசிகளுக்கும் பண மழை தான்

மேலும் இந்த எண் நான்கு பெரும்பாலும் நிலையற்ற தன்மையைக் கொண்டது. ராகு என்பது திடீரென்று கொடுத்த திடீரென்று கெடுத்து விடுவார். ஆதலால் இந்த எண் நான்கு என்பது அவ்வளவு நல்லதாக கருதப்படுவதில்லை. அதோடு சக்தி வெற்றி மற்றும் செழிப்புடன் தொடர்புடையது. ஆனால் சனி ஒருவருக்கு ஆதிக்கம் செலுத்தும் பொழுது சில நேரங்களில் சிரமத்திற்கு ஆளாக நேர்கிறது.

இதனால் அவர்களுக்கு பதற்றம் மன அழுத்தம் உண்டாகும். அதனால் நாம் சில நேரங்களில் நம் வாழ்க்கை இனிமையாக அமைய இவ்வாறான நியூமராலஜி பார்த்து சில விஷயங்கள் செய்து கொள்வது நம் வாழ்க்கையில் உண்மையில் பல மாற்றங்களை நிகழத்ததான் செய்கிறது என்பது தவிர்க்க முடியாத உண்மையாகிறது. ஆக, உங்களுடைய எண் இதுவாக இருந்தால் நீங்களும் கவனமாக இருங்கள் முடிந்தால் அதை மாற்றியமைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யலாம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

 




+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US