நினைத்தது நடக்க செய்யும் சக்தி வாய்ந்த சதுர்த்தி விரதம்
விநாயகப் பெருமானின் அருளை பெறுவதற்காக இருக்கும் விரதம் சதுர்த்தி விரதம் ஆகும். விநாயகர் எளிமையான தெய்வம் என்பதால் சதுர்த்தி விரதமும் எளிமையானது. சதுர்த்தியன்று காலையில் நீராடி, விநாயகர் கோவிலுக்கு சென்று 11 முறை வலம் வந்து வணங்க வேண்டும்.
விநாயகர் அவதரித்த திதியையே விநாயகர் சதுர்த்தி எனக் கொண்டாடப் படுவதாக புராணங்கள் கூறுகின்றன. ‘விநாயகர் என்றால் ‘மேலான தலைவர்’ என அர்த்தமாகும். ‘விக்னேஸ்வரர்’ என்றால் ‘இடை யூறுகளை நீக்குபவர்’ என்றும் ‘ஐங்கரன்’ என்றால் ஐந்து கரங்களை உடையவ ரெனவும் ‘கணபதி என்பது கணங்களுக்கு அதிபதி என்று பொருள்படும்.
இப்பொழுது விநாயகர் சதுர்த்தி அன்று மேற்கொள்ளும் விரதத்தினால் உண்டாகும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.
அருகம்புல், வெள்ளெருக்கு ஆகியவற்றால் விநாயகருக்கு மாலை கட்டி போடலாம். இரவு சந்திரன் உதயமாகும் பொழுது விநாயகரை வழிபட்டுச் சந்திரனுக்கு அர்க்கியம் தர வேண்டும் என்கிறது சாஸ்திரம். அன்று சந்திரன் தெரியாமல் இருந்தால் அடுத்த நாள் பூஜை செய்ய வேண்டும்.
அந்த நாளில் காலையிலிருந்து விரதம் இருந்து இருந்து கணபதியைத் மனதார வேண்டிக்கொள்ள வேண்டும். இரவு பூஜை முடித்த பின் கணேச நிவேதனத்தை மட்டும் உட்கொள்ளவேண்டும்.
மேலும் சதுர்த்தியின் மகிமையை முருகப் பெருமானே முனிவர்க்கு எடுத்துரைக்கிறார் ஸ்காந்தத்தில். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் சிறந்தது சங்கடஹரணம் என்றும் இது அழைக்கப் பெறும்.
இவ்விரதத்தை மேற்கொண்டு பலன்கள் பெற்றவர்கள் பலர்.அதில் காட்டில் தருமபுத்திரர் இவ்விரதத்தை மேற்கொண்டார்.
பாண்டவர்க்கு இவ்விரதத்தை உபதேசித்தவர் கண்ணபிரான். முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார்.
பார்வதி ஆண்டுக்காலம் இவ்விரதத்தை மேற்கொண்டு தன் பதியை அடைந்தாள். இந்திரன், சிவன், இராவணன் போன்றோர் இவ்விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர்.
மேலும் அனுமன் சீதையைக் கண்டது, தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கௌதமரை அடைந்தது போன்றவை நிகழ்ந்ததும் இவ்விரதத்தின் மகிமையால் தான்.
ஆக மிகவும் இந்த எளிமையான விரதத்தை நாம் சதுர்த்தி அன்று மேற்கொண்டு நம்முடைய வாழ்க்கையில் நன்மைகள் பெருவமாக.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |