வீட்டில் முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய ஆன்மீக குறிப்புகள்

By Sakthi Raj Oct 06, 2024 05:30 AM GMT
Report

ஆன்மிகம் என்பது நம்முடைய வாழ்வியல் தொடர்புடையது.நாம் அதை சரியாக பின் பற்றினால் போதும் வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை சந்திக்கலாம்.அதாவது நம் அன்றாட வாழ்க்கையில் சில தடங்கல் ஏற்படும் அதை நம்மால் உணர முடியும் ஆனால் அது எதற்காக நடக்கிறது என்று தெரியாமல் நாம் தவிர்த்து விடுவோம்.

பின்னாளில் நாம் கவனித்து பார்த்தால் ஏதேனும் தவறுதலாக ஆன்மீகத்தில் நாம் கடைபிடித்து கொண்டு இருந்திருக்கலாம்.அதை உணர்த்தும் வகையில் நமக்கு சில தடங்கல் அறிகுறி ஏற்பட்டு இருக்கும்.அப்படியாக வீடு என்பது கோயில் போன்றது.

ஒருவரது எண்ண அலைகள் மற்றும் ஒரு மனிதன் மனிதனாக ஒருவெடுப்பது இந்த வீட்டில் இருந்து தான்.அப்படியாக அந்த வீட்டை நாம் சுத்தமாக ஆன்மீக ரீதியாக சரியாக கடைபிடித்து வர வாழ்க்கையில் ஏற்படும் பல துன்பங்களில் இருந்து நாம் நம்மை பாதுகாத்து கொள்ளமுடியும்.

வீட்டில் முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய ஆன்மீக குறிப்புகள் | Important Spiritual Things

ஒரு வீட்டில் நிலை வாசல் என்பது மிக முக்கியமான ஒன்று.அப்படியாக நம்முடைய வீட்டு நிலை வாசப்படியில் வேப்பிலையோ அல்லது மா இலையோ கட்டாயம் கட்டியிருக்க வேண்டும். ஒரு வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு வாரத்திற்கு ஒரு முறையோ அந்த இலைகளை மாற்றினால் போதும். இவைகளை தினம்தோறும் புதிது படுத்த வேண்டும் என்று அவசியம் இல்லை.

உலகின் முதல் நடராஜர் கோயில் எங்கு உள்ளது தெரியுமா?

உலகின் முதல் நடராஜர் கோயில் எங்கு உள்ளது தெரியுமா?


இதோடு சேர்த்து ஒரு வெள்ளருக்கன் கட்டையை எடுத்துவந்து, சுத்தமாக மஞ்சள் தண்ணீரில் கழுவி, அந்த கட்டையின் மேல், மஞ்சள் பூசி ஒரு குங்குமப் பொட்டு வைத்து, ஒரு சிகப்பு கயிறு கட்டி நிலவாசப்படியில் தொங்கவிடுவது வீட்டிற்கு மிகவும் நன்மையை தரும்.மேலும் அவற்றிக்கு தினம்தோறும் ஊதுபத்தி காண்பிக்க வேண்டும்.இவ்வாறு செய்யும் பொழுது வீட்டில் நேர்மறை ஆற்றல் நிரம்பி இருக்கும்.

வீட்டில் முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய ஆன்மீக குறிப்புகள் | Important Spiritual Things

மேலும் நாம் வீட்டை விட்டு வெளியே செல்லும் போதும், வீட்டிற்கு உள்ளே வரும்போதும், நிலவச படியின் மேல் கால் வைத்து மிதித்து செல்லக்கூடாது. எப்போதுமே நில வாசல் படியை தாண்டி தான் செல்ல வேண்டும். நம்முடைய வீட்டு குழந்தைகள் நிலவாசல்ப்படியை, மிதித்தால் கூட, அப்படி மிதிப்பது தவறு என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டும்.

மிக முக்கியமாக தினந்தோறும் காலை வேளையிலும், மாலை வேளையிலும் வீட்டில் தீபம் ஏற்றுவது வீட்டிற்கு வரும் ஆபத்துகளில் இருந்து நம்மை காப்பாற்றுகிறது.இது எல்லோருக்கும் தெரிந்த ஒரு முக்கியமான விஷயமாக இருந்தாலும் வீட்டில் தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, விஷ்ணு சகஸ்ர நாமத்தையும், கந்த சஷ்டி கவசத்தையோ அல்லது அஷ்டலட்சுமி பாடல்களையோ ஒலிக்க செய்வது வீட்டில் செல்வ வளத்தை அதிகரிக்கும்.

இவ்வாறு குறிப்பிட்ட சில விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நாம் பின்பற்றி வர வீட்டில் சந்தோசம் நிலவுவதை நாம் பார்க்க முடியும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
bakthi@ibctamil.com
Email US