தமிழ்நாட்டில் காசிக்கு நிகரான ஆலயம் எங்கு இருக்கிறது தெரியுமா?
ஒருவர் சிவன் ஆலயம் சென்று வழிபாடு செய்வது என்பது சாதாரண விஷயம் அல்ல.காரணம்,அனைவராலும் சிவன் கோயிலுக்கு சென்று நமச்சிவாய என்று நாமம் சொல்லி வழிபாடு செய்யும் பாக்கியம் கிடைப்பதில்லை.
அப்படியாக நமக்கு சிவநாமம் சொல்லும் வாய்ப்பு கிடைப்பதையே புண்ணியமாக கருதவேண்டும்.மேலும்,நாம் சிவன் கோயில் சென்று வர கட்டாயம் நம் வாழ்வில் நல்ல மாற்றங்கள் நடக்கும்.அப்படியாக தமிழ் நாட்டில் இருக்கும் அனைத்து சிவன் கோயில்களும் ஒவ்வொரு சிறப்புக்கள் கொண்டது.
அந்த வகையில் காசிக்கு நிகரான ஆலயமும் நம் தமிழ் நாட்டில் இருக்கிறது.காசிக்கு செல்ல முடியாதவர்கள் கட்டாயம் இங்கு சென்று வர நல்ல திருப்பம் பெற முடியும்.மேலும்,தமிழ்நாட்டில் சிவனுக்குரிய முக்கியமான ஸ்தலங்களின் பெருமைகள் பற்றி பார்ப்போம்.
ராஜ கோபுரத்தை விட மூலவருக்குஉயர்ந்த விமானம் உள்ள இடங்கள்
1,திருப்புனவாசல் -ஶ்ரீவிருத்தபுரீஸ்வரர்
3,கங்கைகொண்டசோழபுரம் – பிரகதீஸ்வரர்
4,தாராசுரம் – ஐராவதேஸ்வரர்
சிவனுக்குரிய விஷேசஸ்தலங்கள்.
1, திருவேள்விக்குடி – கௌதுகாபந்தன க்ஷேத்ரம்
2, திருமங்கலகுடி – பஞ்சமங்கள க்ஷேத்ரம்
3, திருவையாறு – பஞ்ச நந்தி க்ஷேத்ரம்
4, திருவிடைமருதூர் – பஞ்சலிங்க க்ஷேத்ரம்
5, திருநீலக்குடி – பஞ்சவில்வாரண்ய க்ஷேத்ரம்
6, திருவிற்கோலம் – நைமிசாரண்ய க்ஷேத்ரம்
7, திருநெல்லிக்கா – பஞ்சாட்சரபுரம்
8, காஞ்சி – சத்தியவிரத க்ஷேத்ரம்
9, திருவல்லம் – வில்வாரண்யம்
10, திருகண்டியூர் – ஆதிவில்வாரண்யம்.
11. திருபள்ளுர் -- பரசுராம ஷேத்ரம்
சிவ பூஜைக்கு சிறந்தஸ்தலங்கள்.
1, திருக்குற்றாலம் – திருவனந்தல் பூஜை
2, இராமேஸ்வரம் – காலை சந்தி பூஜை
3, திருவானைக்கா – உச்சிகால பூஜை
4, திருவாரூர் – சாயரக்ஷை பூஜை
6, சிதம்பரம் – அர்த்தஜாம பூஜை
7. திருபள்ளுர் -பிரதோஷ கால பூஜை
காசிக்குமுன் தோன்றிய ஸ்தலங்கள்
1,திருப்புனவாசல் -ஶ்ரீவிருத்தபுரீஸ்வரர் (வ்ருத்தகாசி)
காசிக்குசமமான ஸ்தலங்கள்
2, திருவையாறு.
3, மயிலாடுதுறை.
4, திருவிடைமருதூர்.
5, திருச்சாய்காடு.
6, ஸ்ரீவாஞ்சியம்.
7, விருத்தாசலம்.
ராமேஸ்வரத்துக்கு முன் தோன்றிய ஸ்தலம் பரசுராமேஸ்வரம் (தற்போது பள்ளுர் என்னும் கிராமம் ), குருதி தர்ப்பணம் விஷேசம் மூன்று யுகங்களுக்கு முன் பரசுராமர் தவம் செய்து பரசுஆயுதம் பெற்று குருதி தர்ப்பணம் செய்த இடம் ,, பரசுராமர் ஆலயம் பள்ளூர் கிராமம் ,திருமால்பூர் ரயில் நிலையம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |