இன்றைய ராசி பலன் (14-07-2026)

Report

மேஷம்:

இன்று காலை முதல் உங்கள் வீடுகளில் பதட்டமான நிலை காணப்படலாம். திடீர் வெளியூர் செல்ல திட்டமிடுவீர்கள். குழந்தைகள் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

ரிஷபம்:

நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு உயர்வான நாள். வேலையில் உங்களுக்கு தொந்தரவு செய்தவர்கள் விலகி செய்வார்கள். வேலை பளு அதிகரிக்கும்.

மிதுனம்:

குடும்பத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு அமைதியான சூழல் உருவாகும். திருமணம் தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த கசப்புகள் விலகும். சேமிப்பு அவசியம். ஆடம்பர செலவுகளை குறைக்கலாம்.

ஏன் ஒவ்வொரு கோவிலிலும் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது? இதன் பின்னால் இருக்கும் தெய்வீக காரணம் என்ன?

ஏன் ஒவ்வொரு கோவிலிலும் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது? இதன் பின்னால் இருக்கும் தெய்வீக காரணம் என்ன?

கடகம்:

இன்று ஒருவரை நம்பி எந்த வேலையும் கொடுக்காதீர்கள் ஏமாற்றம் அடையலாம். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். வேலையில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நாள்.

சிம்மம்:

வழக்கு விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். தாயிடம் தேவை இல்லாத வாக்கு வாதம் செய்யாதீர்கள். வியாபாரத்தில் சிறு சிறு கசப்புகள் வந்து செல்லும்.

கன்னி:

இன்று தொழில்நுட்ப ரீதியாக முக்கியமான பொருட்கள் பழுதடையலாம். தேவையில்லாத செலவுகளை சந்திப்பீர்கள். தாய்மாமன் வழியே நல்ல ஆதரவு கிடைக்கும்.

துலாம்:

வேலையில் முழு கவனத்தை செலுத்துவீர்கள். பொருளாதார ரீதியாக உங்களை எப்படி மேம்படுத்துவது என்பதை பற்றி ஆலோசனையை செய்வீர்கள். குடும்பத்தினருடைய முழு ஆதரவு கிடைக்கும்.

விருச்சிகம்:

தொழில் ரீதியாக உங்களுக்கு இருந்து வந்த சங்கடங்கள் விலகும். கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது அவசியம். தேவை இல்லாத பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

தனுசு:

உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பை பெறுவீர்கள். இன்று உங்கள் சொந்தங்களில் யார் எப்படி என்பதை பற்றி புரிந்து கொள்வீர்கள். ஒரு சிலருக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும்.

சனிபகவானை சாந்தப்படுத்தும் எளிய முக்கிய பரிகாரங்கள்

சனிபகவானை சாந்தப்படுத்தும் எளிய முக்கிய பரிகாரங்கள்

மகரம்:

இன்று வேலையில் விரக்தி மற்றும் நண்பர்களிடத்தில் சிறு சிறு பிரச்சனைகளை சந்திப்பீர்கள். குடும்பங்கள் மத்தியில் சில பிரச்சனைகள் வந்து செல்லும். குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுவீர்கள்.

கும்பம்:

மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு இன்று பொன்னாட நாளாக அமையப்போகிறது. உறவினர்களிடம் தேவையில்லாத வாக்குவாதம் வைத்துக் கொள்ளாதீர்கள். அமைதி காக்க வேண்டிய நாள்.

மீனம்:

இன்று மனதில் சோர்வு உண்டாகும். எதிர்காலம் பற்றிய கவலைகள் மேம்படும். குழந்தைகள் எதிர்காலத்தை மனதில் வைத்து சில சேமிப்பு செய்து கொடுப்பீர்கள். மதியம் மேல் நற்செய்தி வந்து சேரும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US