நாளைய ராசி பலன் (27-05-2026)

Report

மேஷம்:

வேலை தொடர்பாக நீங்கள் திடீர் வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் நட்பு பாராட்டுவீர்கள். தொலைந்த பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.

ரிஷபம்:

நண்பர்கள் மத்தியில் ஏற்பட்ட மன கசப்புகள் விலகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பை பெறுவீர்கள். வழக்கு விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும், பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டு.

மிதுனம்:

நீண்ட நாட்களுக்கு பிறகு மனதில் தெளிவும் தன்னம்பிக்கையும் உண்டாகும். பூர்வீக இடத்தை விட்டு வெளியே நகர்வதற்கான வாய்ப்புகள் கைக்கூடிவரும். குடும்பத்தில் பெரியவர்களின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

2026: இன்று நடக்கும் குரு பெயர்ச்சியால் டாப் யோகத்தை பெறக்கூடிய 3 ராசிகள்

2026: இன்று நடக்கும் குரு பெயர்ச்சியால் டாப் யோகத்தை பெறக்கூடிய 3 ராசிகள்

கடகம்:

புதிய சொத்து சேர்க்கை பற்றி யோசனை செய்வீர்கள். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் தடையின்றி நடைபெறும். வம்பு வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள்.

சிம்மம்:

வியாபாரத்தை விரிவு செய்வது பற்றி ஆலோசனை செய்வீர்கள். வீட்டிற்கு விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதார நெருக்கடிகள் விலகும்.

கன்னி:

ஒரு சிலருக்கு பொன் பொருள் சேர்க்கை கிடைக்கலாம். குடும்பத்தினர் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். வேலையில் இடமாற்றம் உண்டு.

துலாம்:

நீண்ட நாட்களுக்கு பிறகு நீங்கள் மகிழ்ச்சியோடு இருக்கக்கூடிய நாள். வேலை ரீதியாக இருந்த பயம் விலக போகிறது. சொந்தங்களால் ஏற்பட்ட கசப்புகள் நீங்கும்.

விருச்சிகம்:

இன்று உங்களுடைய பொருட்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை விலகும். வாழ்க்கை துணையுடன் சுற்றுலா பயணம் செல்வதற்கான சூழலை உருவாக்கும்.

2026 குருபெயர்ச்சி: இப்படி வழிபாடு செய்தால் குருபகவானின் முழு அருள் கிடைக்குமாம்

2026 குருபெயர்ச்சி: இப்படி வழிபாடு செய்தால் குருபகவானின் முழு அருள் கிடைக்குமாம்

தனுசு:

இன்று நீங்கள் எதிர்கால வாழ்க்கையை பற்றிய சிந்தனையில் இருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிடித்த உணவுகளை சாப்பிட்டு மகிழ்வீர்கள்.

மகரம்:

நீங்கள் வேலை தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் தேவை இல்லாத வாக்குவாதம் செய்யாதீர்கள். கணக்கு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். தொழில் ரீதியாக நல்ல லாபம் கிடைக்கும்.

கும்பம்:

இன்று புதிய தொழில் தொடங்குவது பற்றி ஆலோசனை செய்வீர்கள். குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். கடன் அடைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

மீனம்:

மனதில் இருந்த பதட்டம் குறையும். நீண்ட நாள் எதிர்பார்த்த காரியம் கைக்கூடி வரும். தொழில் ரீதியாக சில ஏற்றத்தை பெறுவீர்கள். நன்மையான நாள். வெளிநாடு தொடர்பான விஷயங்களில் இருந்த தடை விலகும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US