நாளைய ராசி பலன் (25-05-2026)

Report

மேஷம்:

இன்று குடும்பத்தில் உங்களுடைய பேச்சுக்கு மரியாதை கிடைக்கும். நீண்ட நாட்கள் தடைபட்ட காரியங்கள் நல்ல முடிவைப்பெறும். பொருளாதார சிக்கல்கள் விலகி முன்னேற்றம் அடையும் நாள்.

ரிஷபம்:

இவர்களுக்கு இன்று தொழில் வாழ்க்கையில் முக்கியமான முடிவுகளை எடுக்கக் கூடிய நாள். உங்களுடைய உடல் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். பிரிந்த நண்பர்கள் மீண்டும் வந்து பேசுவார்கள்.

மிதுனம்:

தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலையில் உங்களுக்கு எதிராக சிலர் செயல்பட வாய்ப்புகள் உள்ளது. பொறுமையாக இருப்பது அவசியம்.

நாய்களுக்கு மரணம் நெருங்கும் பொழுது இப்படி நடந்து கொள்ளுமாம்.. உஷாராக இருங்கள்

நாய்களுக்கு மரணம் நெருங்கும் பொழுது இப்படி நடந்து கொள்ளுமாம்.. உஷாராக இருங்கள்

கடகம்:

நண்பர்களால் சந்தித்த பிரச்சனைகள் விலகும். ஒரு சிலருக்கு திடீர் வெளியூர் பயணம் செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

சிம்மம்:

தொழிலை விரிவு படுத்துவதை பற்றி ஆலோசனை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்து காத்திருந்த இடத்திலிருந்து உங்களுக்கு பணம் வந்து சேரும். பேச்சை குறைத்துக் கொண்டால் நன்மை உண்டாக்கும்.

கன்னி:

குடும்பத்தில் உங்களால் தேவை இல்லாத குழப்பங்களும் மனக்கசப்புகளும் வரலாம். சகோதரர்கள் குடும்ப வாழ்க்கையில் தலையிடுதலை தவிர்க்க வேண்டும். வேலையில் முன்னேற்றம் பெறுவீர்கள்.

துலாம்:

இன்று காலையில் இருந்து மனச்சோர்வு உண்டாகும். இருப்பினும் மதியம் மேல் சுறுசுறுப்பாகவும் நினைத்த காரியத்தை உடனடியாக நடத்தக்கூடிய ஆற்றலும் பெறுவீர்கள்.

விருச்சிகம்:

நீண்ட நாட்களுக்குப் பிறகு நீங்கள் எதிர்பார்த்த காரியம் நடக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஒரு சிலருக்கு அரசியல் ரீதியாக எதிர்பார்த்த அனுகூலம் உண்டு.

தனுசு:

பிள்ளைகளால் நீங்கள் பெருமைப்படுவீர்கள். உங்களுடைய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். வாழ்க்கை துணையின் ஆறுதல் கிடைக்கும்.

எப்பொழுதும் இல்லாததை யோசித்து குழப்பத்திலே இருக்கக்கூடிய ராசிகள் யார் தெரியுமா ?

எப்பொழுதும் இல்லாததை யோசித்து குழப்பத்திலே இருக்கக்கூடிய ராசிகள் யார் தெரியுமா ?

மகரம்:

இன்று உங்களுடைய மன அழுத்தத்திலிருந்து விடுபடுவீர்கள். புதிய நட்புகளின் அறிமுகத்தால் மன மகிழ்ச்சி உண்டாகும். தாயிடம் தேவையில்லாத வாக்குவாதம் செய்யாதீர்கள்.

கும்பம்:

முடிந்தவரை கடன் வாங்குவதையும் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். எந்த ஒரு முன் யோசனையும் இல்லாமல் காரியங்களில் ஈடுபடாதீர்கள். வம்புகளில் சிக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. கவனம் வேண்டும்.

மீனம்:

பூர்வீக சொத்தில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். உங்களுக்கு உறவினர்களுடைய முழு ஆதரவும் கிடைக்கும். எதிரிகளாக இருந்தவர்கள் நண்பர்களாக மாறக்கூடிய நாள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US